Get Tamil cinema News, gossips and reviews on the go...

நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து போலீசார் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில்74 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை வீட்டு வளர்ப்பு நாய் தொடர்ந்து சுற்றிச் சுற்றி வந்து தனது பாசப் போராட்டத்தைக் காட்டியது.

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பால் காலமானார்.

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள அருள்வான் திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திரைப்படத் துறையில் சாதித்ததற்கான மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி கடந்த 23-ம் தேதி அன்று பத்ம பூஷண் விருது பெற்றார்.

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு தர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரனும் நடிக்கிறார்.

இந்தியாவில் சினிமா டிக்கெட் விலையைவிட பாப்கார்ன் விலை அதிகமாக இருப்பதாக நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக ஜூன் 22-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் ஆஜராக வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் 23 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேருக்கு நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், அல்லு அர்ஜுன் ஜூன்.22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இயக்குனர் மிஷ்கின் மற்றும் கீர்த்திசுரேஷ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சத்தியவான் சாவித்திரி. இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிலையில், சத்தியவான் சாவித்திரி படம் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நடிகரும், இசையமைப்பாளருமான பிரகாஷ் ராஜ் தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே கருத்துடைய கட்சி இருந்தால் நிச்சயம் மக்கள் பணிக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்தியேகன் நடித்துவரும் சேயோன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதமே எஞ்சியுள்ள முழுப்படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா பூவுலகில் இருத்து விடைபெற்றார். தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜய் சேதுபதியின் புதிய படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபலமான God of War வீடியோ கேம் தொடரின் அடுத்த பாகமாக "God of War: Laufey" என்ற புதிய கேமை, சோனியின் சான்ட்டா மோனிகா ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது விளையாட்டின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், சிக்மா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிக்மா திரைப்படம் ஜூலை 31-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி அளித்துள்ள பேட்டியில், தனது பிளாக்பஸ்டர் படமான கருப்பு, நடிகர் விஜய் முழுமையாக அரசியலில் நுழைவதற்கு முன்பு அவரது கடைசி திரைப்படமாக அமைய வேண்டியது என வெளிப்படுத்தினார். படத்தை உருவாக்கும்போது விஜய்யுடன் நாங்கள் இரண்டு மூன்று சந்திப்புகளை நடத்தினோம். அந்த சந்திப்புகள் சிறிது காலம் நீடித்தன என தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள அரசன் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர்.

முதலமைச்சர் விஜயை சந்திக்கும் திரைப்பிரபலங்கள்தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். அவரை தொடர்ந்து இசையமைப்பாளர் தமனும் முதல்வர் விஜயைச் சந்தித்துள்ளார். மாஸ்டர், லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பான படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக உள்ள சேரனின் தயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொந்த ஊரான பாளையூர்பட்டியில் கமலா பாண்டியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நடிகர் ராம்சரண், இந்திய கிரிக்கெட் வீரர், ஜஸ்பிரீத் பும்ராவை தவறுதலாக 'கால்பந்து வீரர்' எனக் குறிப்பிட்டதற்காக மன்னிப்புக் கோரினார். பெத்தி இசை வெளியீட்டு விழாவில், அவரிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்கப்பட்டது. அப்போது பும்ராவை கால்பந்து வீரர் எனக் கூறிப்பிட்டிருந்த நிலையில், மன்னிப்புக் கோரினார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் தெரிவித்துள்ளது.

பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் படம் தாழ் திறவா. இப்படத்தின் டீசர் நேற்று கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது. இதனைத்தொடர்ந்து இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள இம்மோர்டல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் கடந்த மே 15இல் வெளியான கருப்பு படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் சுமார் ரூ .20.66 கோடியாகவும், இரண்டாம் நாளில் ரூ.38 கோடியாகவும் இருந்த கருப்பு படத்தின் வசூல், வார இறுதியான நேற்று ரூ. 120.75 கோடியாக உயர்ந்தது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.78 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பார்வதி திருவோத்து. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வரும் பார்வதி திருவோத்து முதன்முறையாக இயக்குனராக களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2' திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இதனையும் செல்ல அய்யாவுவே இயக்கியுள்ளார்.

கன்னட திரையுலக நடிகரும், தயாரிப்பாளருமான திலீப் ராஜ் தனது 47 வது வயதில், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவருடைய இந்த திடீர் மறைவு கன்னட சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையினரிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு படத்திற்கு, 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. வரும் 14, 15 ஆகிய நாட்களில் ஒரு சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி உள்ளப் படம் பெத்தி. இதில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இதன் டிரெய்லர் மே.18ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி உள்ளனர்; அவர்களின் ஆணையின் வாயிலாக ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும். மாறாக, சிக்கல்களையோ அல்லது பிளவுகளையோ உருவாக்க முயல்பவர்கள் பொதுமக்களின் மிகுந்த அதிருப்தியையே ஈட்டிக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளப் படம் கருப்பு. இப்படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேர்த்தியாகவும், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்யின் பதவியேற்பு தற்போது இழுபறியாகி இருக்கும் சூழலில், இந்த பிரச்னைகள் ஓய்ந்தபின்பு டிரெய்லர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

‘மேயாத மான்' இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் 29. இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மே.8 வெளியாக உள்ளநிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

காதல் என்பது ஒரே ஒருமுறை மட்டுமே நிகழ்வதல்ல என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். காதல் என்பது எப்போதும் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்றும், அதில் எதிர்பார்ப்புகள் நுழையும்போது, அது காதலாக இல்லாமல் ஒரு 'வியாபார பரிமாற்றம்' போல மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாட்களாக வெளியாகாமல் இருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' படத்தில், மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் ரஜினிக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஒரு பெரிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன் என அவர் சூசகமாக கூறியிருந்தார்.

கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கென் கருணாஸ் கடவுளுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

இயக்குனர் ராம் குமார் உடன் ‘இரண்டு வானம்' படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில், ‘இரண்டு வானம்' படத்தின் முதல் பாடலான ‘வெள்ளிச்சுடரே' இன்று மாலை வெளியானது.

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரவி மோகன் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் நாளான நேற்று ரவி மோகனும், கெனிஷாவும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கேஜிஎஃப் 3 இப்போது உருவாக வாய்ப்பிலை என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். ராமயணா, டாக்சிக் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், நல்ல கதை அமைந்தால் நிச்சயம் உருவாகும் எனவும் தகவல்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படம் என்டிஆர் நீல், 2027 ஜூன் 11 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான மே 20 அன்று இப்படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை ஒரே வாரத்தில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி மற்றும் மதப் பிரிவினைகள் தேச ஒற்றுமையைப் பாதிப்பதாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவே தான் இந்தச் சான்றிதழை பெற விரும்புவதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை.

விஜய்யின் மாஸ் லுக்.. வைரலாகும் 'வாரிசு' பட போஸ்டர்..

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து?

விரைவில் வெளியாகும் 'சியான் 61' அப்டேட்.. ஜி.வி.பிரகாஷ் சொன்ன சூப்பர் நியூஸ்..

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி! மனமுடைந்த சின்மயி

பங்கமாய் கலாய்த்து படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன்

தாய்-தந்தையர்க்கு சிலை எழுப்பிய ரஜினி.. நினைவு மண்டபம் கட்டவும் திட்டம்

மீண்டும் சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடும் அஜித்