Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்'` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல் என விரிவாக விசாரித்தோம்.
`பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன' என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன்' என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.
2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks
'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்போகிறார்கள்' என்றும் அ.தி.மு.க-வினர் மாறி மாறிப் பேசிவருவதால் பரபரத்துக் கிடக்கிறது மதுரை மாநகர அ.தி.மு.க!
மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது! அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பெர்முடா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்ததாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்தி முறைகேடு செய்ததாகவும் முதல் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது ஹிண்டன்பர்க்.
இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைக் கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் குடியேறுகிறார்கள்.
அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி' விசாரித்துவரும் நிலையில், ‘செபி' தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
North Korea nu sonnathum namakku sattunu nyabagam varathu KIM JONG UN. Aduthu nyabagathuku varathu avar potruka RULES. Antha rules pathi than intha podcast.VAANGA KEKKALAM! -CringeTalks
Namma Car la ennenna vechurupom? Samy silai, Perfume, Tissue paper etc...etc...vechurupom. Aana Ulaga thalaivargal car la blood group la irunthu CCTV camera varaikkum vechurukanga. Intha maathiri ennenna special vishayangal ulaga thalaivargal car la iruku therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks
இருபது ஆண்டுகளாக வங்கதேசத்தைக் கட்டியாண்டார் ஷேக் ஹசீனா. ஆனால், அவருக்கு எதிரான மாணவர்களின் ஒரு மாத காலப் போராட்டம், நாடற்றவராக அவரை மாற்றியிருக்கிறது. முதன்முறை ஆட்சியைப் பிடித்தபோது மக்களின் ‘நம்பிக்கை நாயகியாக' இருந்த ஷேக் ஹசீனா, இன்று `சர்வாதிகாரி' என்ற பட்டத்துடன் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்!
மீட்பு பணிகளைப் பொறுத்தவரை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், கேரளா மற்றும் அண்டை மாநில மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் 10 நாள்களாக தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ராணுவத்தின் சேவை மீட்பு பணியில் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. ஆற்றின் குறுக்கே போர்க்கால அடிப்படையில் பெய்லி பாலம் அமைத்தது முதல் சூஜிப்பாறா பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பலரை உயிருடன் மீட்டது வரை தனது முழு பலத்தையும் மீட்பு பணியில் செலுத்தியது. மீட்பு பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், 10 நாள்களாக களமாடி வந்த ராணுவம், சிறிய குழுவை மட்டும் களத்தில் விட்டுவிட்டு விடை கொடுத்திருக்கிறது. வரலாறு காணாத இந்த பேரிடரில் தோளோடு தோளாக களத்தில் நின்ற ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் மக்கள் வழியனுப்பி வைத்துள்ளனர். கேரள அரசும் முழு மரியாதையுடன் பலத்த கைதட்டல்களுடன் வீரர்களை வழியனுப்பியது.
“சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மூவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பது மட்டுமே, அ.தி.மு.க-வைப் பீடித்திருக்கும் நோய்களுக் கெல்லாம் சர்வரோக நிவாரணியாகி விடாது. வேறு சில முக்கிய நடவடிக்கைகளைத் துணிந்து எடுத்தால்தான் தென்மாவட்ட வீழ்ச்சியிலிருந்து கட்சியை மீட்க முடியும்” என்ற குரல்கள் அ.தி.மு.க-வுக்குள் எழுந்திருக்கின்றன.
மேயர் பதவிக்கு மண்டலத் தலைவர்கள் உட்பட பலர் தீவிரமாக போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வயநாட்டில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை கொடுத்தும் கேரளா அரசு கண்டுகொள்ளவில்லை என அமித் ஷா சொல்லியிருக்கிறார். மறுபக்கம் தெளிவான தகவலை தங்களுக்குக் கொடுக்கவில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!
``எங்கள் வீட்டுக்குப் பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றம் அதிகமாகி, என் அம்மா என்னவானார் என பயந்தேன்." - சுதர்ஷன்-Vikatan News Podcast
காஞ்சிபுரம் மேயர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள்.-Vikatan News Podcast.
Olympics Vetrikarama thodangi India oru medalum adichachu...Intha samayathula Paris la nadakkara Olympics la ennenna sirampamsam irukunu therinjukalamaa??? VAANGA KEKKALAM!-Cringe Talk
``சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்." - TNPSC-Vikatan News Podcast
``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி-Vikatan News Podcast
திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன?-Vikatan News Podcast
இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.-Vikatan News Podcast
Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom...-Cringe Talk Podcast
'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர்.-Vikatan News Podcast
"சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ்-Vikatan News Podcast
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.-Vikatan News Podcast
``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ்-Vikatan News Podcast
``வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே!`` - தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா.-Vikatan News Podcast
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் மீதான புகார் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன.-Vikatan News Podcast
`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் புதிதாக சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண்.-Vikatan News Podcast
இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.-Vikatan News Podcast
அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான வார்த்தை மோதல் விக்கிரவாண்டி தேர்தலை முன்னிட்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.!-Vikatan News Podcast
Kili josiyam kelvi patrupinga, Kai josiyam kelvi patrupinga, soli potu pakara josiyam kelvi patrupinga...latest ah Computer josiyam kuda kelvi patrupinga...aana RATHTHA JOSIYAM kelvi patrukingala...ithu JAPAN style josiyanga...Intha josiya padi ungaluku yaaru set aavanga nu podcast ketu therinjukalam...Vaanga-Cringe Talk Podcast
அடுத்தடுத்து இரண்டு திமுக மேயர்கள் பதவியை ராஜினாமா செய்ததின் பின்னணியின் நடந்தது என்ன?!-Vikatan News Podcast
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்!-Vikatan News Podcast
காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார்.-Vikatan News Podcast
விஜய் அரசியல் பேசவே தயங்குகிறார் என்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.அது மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் அதோடு நிறுத்திக் கொண்டார்`` - த.வெ.க-வினர் - Vikatan News Podcast.
'Bayam...Bayam...Bayam' - Namma vaazhkaila periya periya Bayamngala kuda easy ah kadanthuruvom...aana chinna bayangalla irunthu thappikkarathu romba kastam. Apadi patta chinna chinna bayangaloda peyar thoguppu than ithu...Vaanga Kekkalam.-The Cringe Talk Podcast.
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது.-Vikatan News Podcast
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி.-Vikatan News Podcast
The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை' தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..!-Vikatan News Podcast
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள்.-Vikatan News Podcast
கலைஞர் உயிரோடு இருக்கும்போது கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். இன்றுவரை மீண்டும் எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை.-Vikatan News Podcast
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க-வில் எப்படியாவது இணைந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ஓ.பி.எஸ்.-Vikatan News Podcast
Nammalla neraya per 'Live To Eat'ngra vishayathukaga than vaazhnthute irukom...Apdi namma aasai aasai sapdra sapadu pirappidam ethu nu therinjukalam vaanga...-Team Cringe Talk
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை.-Vikatan News Podcast
பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.-Vikatan News Podcast
Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga...Credits:Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல்-Vikatan News Podcast