Tamil Audio Books

Follow Tamil Audio Books
Share on
Copy link to clipboard

Greetings. Vanakkam. You will find a collection of Tamil literary works in our podcast A good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also…

Sri Srinivasa


    • Nov 10, 2024 LATEST EPISODE
    • weekdays NEW EPISODES
    • 16m AVG DURATION
    • 615 EPISODES


    Search for episodes from Tamil Audio Books with a specific topic:

    Latest episodes from Tamil Audio Books

    India sudhesa samasthanangal orunginaippu

    Play Episode Listen Later Nov 10, 2024 7:46


    Audiobook Proudly published by Itsdiff Entertainment for Aurality Book and Ebook by Swasam Publications Down load FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும். பெரிய அரண்மனை, ஏவல் செய்ய வேலைக்காரர்கள், அந்தப்புரம் முழுக்க ஆசை நாயகிகள், அவர்களுடனான காமக் களியாட்டம், ஆடம்பர வாழ்க்கை - இவற்றை மகாராஜாக்கள் விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. படேலின் கண்டிப்பில் பலர் உடனே இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டாலும், சிலர் முரண்டு பிடித்தனர். பல்வேறு சலுகைகள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்படியும் ஒத்துக்கொள்ளாதவர்களை இராணுவ ரீதியாக சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது. இந்தியா ஒரு பரந்துவிரிந்த தேசம். பல்வேறு கலாசாரம், மொழி, நிலப் பாகுபாடுகள் நிறைந்த தேசம். இப்படிப்பட்ட தேசத்தில், அதுவும் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களிலேயே இவற்றைச் செய்வது எத்தனை பெரிய சவால்? உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் சாதனையாக இந்த சமஸ்தானங்களின் இணைப்பைச் சொல்லலாம். இலந்தை சு இராமசாமி திறம்பட இந்த நூலை எழுதி இருக்கிறார். பல்வேறு சம்பவங்களை ஆதாரத்துடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் சு இராமசாமி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். தயாரித்து வழங்குவது Aurality by Itsdiff Entertainment

    மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை? வாழவேண்டும்

    Play Episode Listen Later Oct 27, 2024 20:18


    #stress management #aurality #auralitytamilaudiobook https://play.google.com/store/audiobooks/details/K_G_Jawarlal_Stress_Management?id=AQAAAEBySm0KDM download FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam Title:Stress Management ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் : an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by K.G.Jawarlal, ebook and book published by Swasam Publications ஸ்ட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்? அந்த ஸ்ட்ரெஸ் இல்லாவிட்டால் இன்னும் ஜாலியாக வாழலாமே? கொரோனா வந்தபோது அதை எதிர்த்துப் பார்த்து, இரண்டே மாதங்களில் எல்லாரும் சொல்ல ஆரம்பித்தார்கள். 'கொரோனாவுடன் வாழப் பழகவேண்டும்' என்று. ஸ்ட்ரெஸ்ஸும் அப்படித்தான். மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம், அதனால், அதனுடனேயே வாழப் பழகுவது நல்லது. அதுமட்டுமல்ல. ஸ்ட்ரெஸ்ஸே இல்லாவிட்டால் எந்த வேலையையும் திருப்திகரமாய்ச் செய்ய முடியாது. ஒரு வகையில், அளவுக்குட்பட்ட ஸ்ட்ரெஸ் என்பது ஓர் இயக்குவிசை. ஸ்ட்ரெஸ் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை ததும்ப, சுவாரஸ்யமாக, எளிய உதாரணங்கள் மூலமும், சிரிப்பை வரவழைக்கும் கதைகள் மூலமும் விளக்கி இருக்கிறார் கே.ஜி.ஜவர்லால், ஸ்ட்ரெஸ்ஸை நீக்குவதற்கான எளிய பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். இன்றைய ஸ்ட்ரெஸ் உலகத்தில், அது தொடர்பான கடினமான ஒரு புத்தகத்தைப் படிப்பதுகூட நம் ஸ்ட்ரெஸ்ஸைக் கூட்டிவிடக் கூடும்! அப்படி ஒரு வாய்ப்புக்கே வழி இன்றி, இலகுவான நடையில் சுவாரஸ்யமாக இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். #stress #stressudan jollyaga vazhavom Author: K.G.Jawarlal Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment ebook and physical book by Swasam publications

    தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம்

    Play Episode Listen Later Oct 26, 2024 27:32


    சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் https://play.google.com/store/audiobooks/details/Raji_Raghunathan_Sundara_Kaandam?id=AQAAAEByKmZqBM Down load FREE aurality app on google play store and apple store a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன். சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே. அனுமனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிட்டும். ஆனால், நூலை எவ்வாறு வழிபடுவது? நூலைப் பாராயணம் செய்வதே அதை வழிபடுவது. அனுமனை அதிதேவதையாகக் கொண்ட சுந்தர காண்டப் பாராயணம் மிகவும் சக்தி வாய்ந்தது. கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி போலக் கேட்டதை அருளக் கூடியது. சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் என்பது https://play.google.com/store/audiobooks/details/Raji_Raghunathan_Sundara_Kaandam?id=AQAAAEByKmZqBM பொதுவான பொருள். சுந்தரம் என்பதற்கு அழகு என்பதோடு ஆனந்தம் என்ற பொருளும் உள்ளது. தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம். இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போன சீதையின் அடையாளம் தெரிந்த காண்டம் என்பதால் இதற்குச் சுந்தர காண்டம் என்று பெயரிட்டார் வால்மீகி. சீதா தேவி இருக்குமிடம் தெரிந்த பின் எத்தனை பேர் ஆனந்தம் அடைந்தார்கள்? முதன்முதலில் ஆஞ்சநேய சுவாமி. அவர் கூறிய பின் வானர வீரர்கள். அதன் பின்னர் சுக்ரீவன். அதன் பிறகு ராமச்சந்திர மூர்த்தியும் லட்சுமணனும் ஆனந்தமடைந்தார்கள். அது மட்டுமல்ல! ராமன் எப்படி இருக்கிறான் என்பது பற்றித் தெரியாமல் வருந்திய சீதை, அனுமன் கூறிய பின் ஆனந்தமடைந்தாள். இத்தனை பேரின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதி ஆதலால் இது சுந்தர காண்டம். அதாவது ஆனந்த காண்டம். அதனால் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும். எப்படிப்பட்டவருக்கும் ஆதரவும் அமைதியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியது சுந்தர காண்டம். பல விசேஷச் சிறப்புகளோடு கூடிய சுந்தர காண்டத்தில் சுந்தரம் அல்லாதது எதுவும் இல்லை. ராஜி ரகுநாதன் மயக்கும் தமிழில் இதை எழுதியுள்ளார்.

    லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்

    Play Episode Listen Later Oct 23, 2024 25:45


    Title: Lal Bahadur Shasthriyin Marma Maranam https://play.google.com/store/audiobooks/details/Sakthivel_Rajkumar_Lal_Bahadur_Shasthriyin_Marma_M?id=AQAAAEByTEgMKM Subtitle: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Series Name: Not Set Series Entry: Not Set Description: Author Sakthivel Rajkumar Audiobook produced by Aurality / itsdiff Entertainment eBook / book by Swasam Lal Bahadur Shasthriyin Marma Maranam இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார். Author: Sakthivel Rajkumar Narrator: Pushpalatha Parthiban audiobook Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment aurality.app to download our app to provide feedback apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share

    Project Management 101 by Sri Srinivasa

    Play Episode Listen Later Oct 22, 2024 14:38


    Podcast Title: Produced by Itsdiff Academy Main Title: Project Management Best Practices Subtitle: A Presentation by Sri Srinivasa    Educator, Public Speaker, Podcastor, Actor, Humorist and Project Management Professional with 25+ years of industry experience - Linked in Sri Srinivasa Tagline: Insights for Aspiring Project Managers and the Startup Community   This document is a presentation on Project Management Best Practices by Sri Srinivasa, a seasoned Program Manager. The presentation aims to educate and inspire aspiring project managers and the startup community. It begins by providing a general overview of project management, highlighting key terminologies and frameworks. The document then delves into the Project Life Cycle, outlining steps like planning, initiation, execution, and monitoring. The presentation stresses the importance of effective communication, collaboration, and risk management in project success, while also introducing essential tools like Project Charters, Gantt Charts, and RACI Matrices. The document concludes by offering tips for leading projects effectively and outlining potential topics for future discussions."   Credits to Google - notebook LM for the podcasting based on Sri Srinivasa's presentation done at Harbard Business Analytics Program and Harvard Business School ins 2020

    மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது?

    Play Episode Listen Later Oct 18, 2024 28:15


    Title: Maatru Ulagam Subtitle: Life after Life - மாற்று உலகம் Series Name: a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Itsdiff Entertainment ebook by Swasam Audiobook by : Aurality/ Itsdiff Entertainment Author: ராஜேந்திர கெர் Translator: ப்ரியா ராம்குமார் Book/ Ebook Publisher: சுவாசம் ஒரு மனிதன் இறந்தபின்பு அந்த உயிர் எங்கே போகிறது? ஆவி அல்லது ஆன்மா என்று சொல்லப்படுவது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? ஆன்மா எங்கே வாழும்? ஆன்மாவின் பயணம் என்பது என்ன? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாத தனிமனிதனோ சமூகமோ இருக்க முடியாது. மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை அனைவரையும் துரத்தும் இக்கேள்விகளுக்கு இந்தியப் பாரம்பரியத்தையும் பல்வேறு தத்துவப் புத்தகங்களையும் முன்வைத்து இந்தப் புத்தகம் பதில் தேட முனைகிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் திரையை விலக்கும் இந்த நூல், மரணம் பற்றிய தேவையற்ற பயத்தை நீக்கி, வாழ்தலின் ஆனந்தத்தை உணரச் செய்கிறது. பரமாத்மாவை நோக்கிய பயணத்தில் ஜீவாத்மா உணரும் ரகசியங்களை எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது இந்த ‘மாற்று உலகம்'. எழுத்தாளர் ராஜேந்திர கெர் எழுதி ப்ரியா ராம்குமார் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Priya Ramkumar Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment

    ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும்

    Play Episode Listen Later Oct 8, 2024 8:29


    a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Title: Arththam Niraintha Hindu Dharmam Subtitle: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Series Name: A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்' என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வேதங்கள் சொல்லும் அடிப்படை விஷயங்களை மிக எளிமையாக இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமாக விளக்கும் நூல் இது. ஹிந்து தர்மம் என்னும் மாபெரும் கடலின் ஒரு துளி இந்தப் புத்தகம். இத்துளியை நீங்கள் புரிந்துகொண்டால், மாபெரும் கடலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம். எழுத்தாளர் Saadhu Sriram எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saadhu Sriram Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment ebook by Swasam

    கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள்

    Play Episode Listen Later Oct 7, 2024 14:43


    a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும். எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார்.

    ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன,?

    Play Episode Listen Later Oct 6, 2024 24:58


    Title: Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்ந்தபோது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல் என்ன, ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன, எப்படி எந்தச் சூழலில் மகாத்மாவின் உயிரைப் பறிக்கும் அராஜகமான முடிவுக்கு இந்தக் கூட்டத்தினர் வந்து சேர்ந்தார்கள், வழக்கு எப்படி நடைபெற்றது, வழக்கின் தீர்ப்பு என்ன என்பதையெல்லாம் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். இந்தியாவில் அப்போது கிடைத்த குஜிலி இலக்கியத்தில் இருக்கும் மனவோட்டத்தைக் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன். இந்தியாவில் 1947ல் நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அருமையான புத்தகம். எழுத்தாளர் R. Radhakrishnan எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment

    ரிஷி செய்தது சாதாரண தியாகமா?

    Play Episode Listen Later Sep 17, 2024 11:13


    Title: வெண்ணிலவில் ஒரு கருமுகில் - Venilavil Oru Karumugil Social Novel download FREE aurality app apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ? வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே......... என்ன மோசமான கனவு! இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு. Author: Pavala Sankari Narrator: Uma Maheswari Publisher: itsdiff Entertainment

    அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

    Play Episode Listen Later Sep 15, 2024 40:26


    Title: எட்டுத் திக்கும் மதயானை - Ettu Thikkum Madha Yaanai Subtitle: download FREE aurality app apple store apps.apple.com/us/app/aurality-i…ment/id1638152365 or play store in google - play.google.com/store/apps/detail…paignid=web_share எட்டுத் திக்கும் மதயானை படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி . பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் .. என்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்! நாஞ்சில் நாடன் Author: Nanjil Nadan Narrator: C Raja Appasamy Publisher: itsdiff Entertainment

    ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் - 'பொற்காலம்'

    Play Episode Listen Later Sep 14, 2024 15:18


    Original by Raghavan Srinivasan ராகவன் சீனிவாசன் (Author), Sridhar Trichendurai ஸ்ரீதர் திருச்செந்துறை (Translator) a proud audiobook production by aurality/ itsdiff entertainment ebook by Swasam Publications download FREE aurality app apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது. எழுத்தாளர் ராகவன் சீனிவாசன் எழுதி ஸ்ரீதர் திருச்செந்துறை மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality/ itsdiff Entertainment

    இது வீடு விட்டு, காடு செல்லும் கதை

    Play Episode Listen Later Sep 13, 2024 7:26


    ஆறுமுகனின் வனவாசம்: download aurality app and give it a listen apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share இது வீடு விட்டு, காடு செல்லும் கதை. அமலமுனி குறிப்பிட்ட அந்த ஒரு ஆண்டில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளே இக்கதை... ஆறுமுகன் அதற்கு எவ்வாறு தன்னை தயாராக்கி கொண்டு, தடைகளை தவிர்த்து, காட்டில் வாழ்ந்து அமலமுனி கூறிய ஓராண்டில், ஆறுமுகன் என்ன என்ன மாற்றங்கள் பெற்று இருப்பான் என்பதை இனி வெளிவரும் பாகங்களிலேயே காணலாம்... த.ஆ.வெங்கடேஷ் முருகா ================ an aurality/ itsdiff Entertainment production

    பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை

    Play Episode Listen Later Sep 9, 2024 9:50


    Malaiyankulam - Short story collection மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்' நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும். எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality Author: Jayaraman Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment

    உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லும் சித்தர் -

    Play Episode Listen Later Sep 8, 2024 13:00


    Title: Porkai Swamigal – Sri Sheshadri Swamigal Subtitle: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store ? https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality Author: Sathiyapriyan Narrator: Pushpalatha Parthiban Publisher: audiobook - Itsdiff Entertainment ebook - Swasam

    தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு குறித்து அறிய விரும்புவோர் இந்நூலைப் படிக்க வேண்டும்.

    Play Episode Listen Later Aug 30, 2024 16:58


    நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Eliya Tamilil Chola Varalaaru Subtitle: எளிய தமிழில் சோழ வரலாறு An Aurality Tamil Audio Book Production - http://aurality.app Educate, Entertain and Enhance Eliya Tamilil Chola Varalaaru (Original: Rasamanikkanar): (மூலம்: இராசமாணிக்கனார்) எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் பதிப்பிற்குத் தந்திருக்கும் முன்னுரையே இதற்கு ஆதாரம். இராசமாணிக்கனாரின் காலத்து ஆய்வுத் தமிழில் அமைந்த நூல் இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் எளிய தமிழில் முழுமையாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுயுகத்துக்கு முன்பான சோழர்கள் தொடங்கி, சோழன் நலங்கிள்ளி, கிள்ளி வளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிக்கிள்ளி என அனைத்து மன்னர்களையும் ஆராய்ந்து, எழுச்சி பெற்ற சோழர்கள் காலத்தைச் சேர்ந்த முதல் பராந்தக சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்களின் ஆட்சியையும் அவர்களது சாதனைகளையும் விவரித்து, பின்னர் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் வரையிலான அனைத்து சோழர்களின் வரலாறும் ஆய்வுபூர்வமாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு, கொடை, கல்வெட்டுகள், நிவந்தங்கள், சோழர்கள் கட்டிய கோவில்கள், சோழர்களின் படையெடுப்புகள் என இந்த நூலில் இடம்பெறாத தகவல்களே இல்லை எனலாம். தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்ள நினைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய அரிய நூல் இது. Author: Achyutan Shree Dev Narrator: Pushpalatha Parthiban Publisher of audiobook Itsdiff Entertainment ebook by Swasam Publications

    மறைக்கப்பட்ட பலரது முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது ?

    Play Episode Listen Later Aug 29, 2024 9:43


    நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Vaikom Poraattathil Brahmanargal Subtitle: வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் Series Name: Not Set Series Entry: Not Set Description: An Aurality Tamil Audio Book Production திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். பட்டியலினத்தவர்களின் கோவில் நுழைவைச் சாத்தியமாக்கிய இப்போராட்டத்தைக் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தில் பல முக்கியமான தலைவர்கள் பங்கெடுத்தனர். ஆனாலும் இப்போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் குறித்து விவாதம் நடந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைப் பிராமணர்களுக்கு எதிராகச் சித்திரிப்பதில் சில அரசியல் சக்திகளுக்கு உள்நோக்கமும் ஆதாயமும் இருப்பது கண்கூடு. இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுநோக்கில் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். * வைக்கம் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பு என்ன? * இந்தப் போராட்டத்திற்குப் பிராமணர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தனவா? * இந்தப் போராட்ட வெற்றியில் பிராமணர்களின் பங்கு என்ன? இந்தக் கேள்விகள் குறித்து ஆசிரியர் மா.வெங்கடேசன் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். மறைக்கப்பட்ட பலரது முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். An Aurality Tamil Audio Book Production எழுத்தாளர் மா.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Author: M. Venkatesan Narrator: Pushpalatha Parthiban audio book Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications

    வேதங்கள் எப்போது எழுதப்பட்டன? - Veda Kalam

    Play Episode Listen Later Aug 28, 2024 6:40


    நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Vedha Kaalam Subtitle: வேத காலம் (சுருக்கம்) Series Name: Not Set Series Entry: Not Set Description: Vedha Kaalam (Abridged) - a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback - வேத காலம் (சுருக்கம்) Download Aurality in app store , google play to support tamil digitization Rate our audio book Nandri 1. வேதங்கள் எப்போது எழுதப்பட்டன? 2. வேதங்கள் ஏன் எழுத்தில் எழுதப்படவில்லை? 3. சோமரசம் என்பது மதுபானமா? 4. வேத காலக் கல்வி அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை? 5. வேத காலத்தில் பெண்களின் நிலை என்ன? 6. வேத காலச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது? 7. வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படை என்ன? இவை போன்ற கேள்விகளுக்குத் தற்காலத்தில் பலவிதமான பதில்கள் பலராலும் வழங்கப்படுகின்றன. அவற்றுள் எது உண்மை என்பதை அறிவது கடினம். பெரும்பாலான பதில்கள் தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன. வேத காலம் குறித்த கேள்விகளுக்கு உண்மையான, ஆதாரபூர்வமான விடையைத் தேடுவதே இந்த நூலின் நோக்கம். ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் நீண்ட புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் Balshastri Hardas பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் எழுதி B.R. மகாதேவன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: B.R. Mahadevan Narrator: Pushpalatha Parthiban Publisher: of Audiobook Itsdiff Entertainment Ebook by Swasam Publications

    kalam nandri
    Padmanabha Padukolai - தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்

    Play Episode Listen Later Aug 14, 2024 9:24


    Title: Padmanabha Padukolai listen on https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&hl=en_US Subtitle: பத்மநாபா படுகொலை Padmanabha Padukolai / பத்மநாபா படுகொலை An Aurality Tamil Audiobook Production ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்' என்றவரை இனத்துரோகி என்றார்கள். எழுத்தாளர் J. Ramki எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: J. Ramki Narrator: Pushpalatha Parthiban Publisher: Audiobook by Aurality / Itsdiff Entertainment ebook by Swasam

    padmanabha
    மகா விஷ்ணுவால் அருளப்பட்ட கருட புராணம் ஒரு கருவூலம் -புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள்

    Play Episode Listen Later Aug 12, 2024 7:36


    Title: Karuda Puranam Subtitle: கருட புராணம் Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது. இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Author: Raji Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Book by Swasam Audio book by : Aurality/ Itsdiff Entertainment

    ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம்

    Play Episode Listen Later Aug 10, 2024 23:36


    download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Eliya Tamilil Pallavar Varalaaru Subtitle: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Series Name: Not Set Series Entry: Not Set Description: Eliya Tamilil Pallavar Varalaaru (Moolam: Rasamanikkanar): An Aurality Tamil Audiobook Production எளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்: இராசமாணிக்கனார்) மா.இராசமாணிக்கனாரின் மூல நூல் இந்தத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இக்காலத் தமிழ்நடையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இதுபோன்ற இன்னொரு நூல் இல்லை எனலாம். சோழர்களுக்கு முன்பாகத் தமிழ் நிலத்தின் பெரும்பரப்பை, ஏறத்தாழ 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சோழர்களின் காலத்தில் தமிழகக் கட்டடக் கலை உச்சம் தொட்டது என்றாலும், அதற்கான அடித்தளத்தை ஆழமாக இட்டவர்கள் பல்லவர்களே. தமிழ் நிலத்தில் முதன்முதலில் கருங்கற்கள் கொண்டு கோவில் எழுப்பிய பல்லவர்கள், செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களைக் கருங்கற்களால் புதுப்பிக்கவும் செய்தார்கள். இதனைச் சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பல்லவர் கால நீர் மேலாண்மை, காஞ்சி மாநகரின் அருமை, சைவ – வைணவ மதங்களின் எழுச்சி, சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சி, பல்லவர்கள் மேற்கொண்ட போர்கள், அதன் விளைவுகள், அக்காலப் பஞ்சங்கள்; ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அக்கால சமூகப் பொருளாதார நிலைகள், பல்லவர்களின் வீழ்ச்சி போன்றவை இந்தப் புத்தகத்தில் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Achyutan Shree Dev Narrator: Sukanya Karunakaran Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment

    மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை

    Play Episode Listen Later Aug 9, 2024 12:01


    https://play.google.com/store/audiobooks/details/R_Venkatesh_Thirattuppaal?id=AQAAAEAyURcRNM download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Thirattuppaal Subtitle: திரட்டுப்பால் Series Name: Not Set Series Entry: Not Set Description: நகரவாழ் மத்தியத் தர வர்க்கம் என்பது படைப்புக்கான தலைக்காவிரி. தொடும் இடங்கள் எல்லாம் பாத்திரங்களும் காட்சிகளும் நிறைந்தவை. வலிகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் இந்தக் காவிரியில் இருந்து சிறுக சிறுக முகர்ந்து வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜூ வழிவந்தவரான ஆர்.வெங்கடேஷும் அதே முயற்சியையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். நேரடி சம்பவங்களோடு, மனவோட்டம் சார்ந்த சொற்சித்திரம் தீட்டும் பாணியைப் பின்பற்றும் ஆர்.வெங்கடேஷ், எங்கும் குரல் உயர்த்திப் பேசுவதில்லை. வாழ்க்கையின் சில துண்டுகளை இணைத்து, கோவையாக்குவதன் வாயிலாக, கதாபாத்திரங்களில் உள்ளூர ஊசலாடும் மனச்சிக்கல்களுக்கு, எழுத்து வடிவம் தர முயற்சி செய்துள்ளார். மத்தியத் தர வர்க்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையோ, தீர்ப்புகளையோ முன்வைக்காமல், அதன் போக்கை முடிந்தவரை அப்படியே பதிவு செய்வது, ஆர்.வெங்கடேஷின் பாணி. நீங்கள் அறிந்த உலகத்தையே, உங்களுக்கு மலர்த்திக் காட்டும் இந்தச் சிறுகதைத் தொகுதி. ஆர்.வெங்கடேஷ் - கணையாழி இதழின் மூலம் அறிமுகமானவர். எழுதவந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 2 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இராஜாஜி, ஆதவன் ஆகியோரது இலக்கிய பங்களிப்புகள் பற்றி, சாகித்ய அகாதெமிக்காக சிறுநூல்கள் எழுதியுள்ளார். ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சி வழங்கிய எழுத்துத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்' விருது, கலைமகள் நாராயணசாமி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இது இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். An Aurality audiobook production Author: R. Venkatesh Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment Title:

    சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது

    Play Episode Listen Later Aug 8, 2024 16:48


    Download free app Aurality tamil audio platform https://play.google.com/store/search?q=aurality&c=apps download chozha sooriyan - part 1 tamil audiobook https://play.google.com/store/audiobooks/details/Siraa_Choza_Sooriyan?id=AQAAAEAyEVZRdM Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment Title: Choza Sooriyan Subtitle: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் Series Name: Part Series Entry: 1 Description: Description சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production Author: Siraa Narrator: Pushpalatha Parthiban

    காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் அலசும் மணிமேகலை

    Play Episode Listen Later Aug 7, 2024 8:58


    download on google play - https://play.google.com/store/audiobooks/details/Sathiyapriyan_Novel_vadivil_Manimekalai?id=AQAAAEAykRrROM download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Novel vadivil Manimekalai Subtitle: நாவல் வடிவில் மணிமேகலை Series Name: Not Set Series Entry: Not Set Description: சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை'க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை'யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production Author: Sathiyapriyan Narrator: Uma Maheswari Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment

    இந்தியத் தேசத்துக்காக இப்படிப் பாடுபட்ட வ.உ.சி.யின் இறுதிக் காலம் எப்படி இருந்தது?

    Play Episode Listen Later Aug 5, 2024 15:48


    Also on Aurality platform - for tamilaudiobooks - https://play.google.com/store/search?q=aurality&c=apps V.O.C on google play https://play.google.com/store/audiobooks/details/P_Saravanan_V_O_C?id=AQAAAEAy1iWWBM வெற்றியும் தோல்வியும் துயரமும் கலந்த வ.உ.சி.யின் ஒப்பற்ற வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது. பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேசிக் கப்பலை வ.உ.சி. வெற்றிகரமாக ஓட்டிக் காண்பித்தார். தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். தேசத் துரோகம் செய்ததாக பிரிட்டிஷாரால் சிறை வைக்கப்பட்டார். இந்தியத் தேசத்துக்காக இப்படிப் பாடுபட்ட வ.உ.சி.யின் இறுதிக் காலம் எப்படி இருந்தது? தனது செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடிய வ.உ.சி., மளிகைக் கடையில் வேலை செய்தார். சுடுகாட்டுக்கு அருகில் குறைந்த வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்தார். வ.உ.சி. இறப்பதற்கு 23 நாட்களுக்கு முன்பு தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவரே தன் துயர்மிகு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். இப்படி வ.உ.சி.யின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், வ.உ.சி. மீதான வழக்கு விவரங்களையும் எளிமையான தமிழில் எழுதி இருக்கிறார் ப.சரவணன். எழுத்தாளர் ப.சரவணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வ.உ.சி புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் an Aurality Production Author: P. Saravanan Narrator: Sri Srinivasa Publisher: Aurality and Itsdiff Entertainment

    யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ?

    Play Episode Listen Later Jul 29, 2024 9:56


    Kaanal Neero Kanmaniye https://play.google.com/store/audiobooks/details/Uma_Nathan_Kaanal_Neero_Kanmaniye?id=AQAAAEDSF2FXoM Also on Aurality platform - for tamilaudiobooks - https://play.google.com/store/search?q=aurality&c=apps Subtitle: கானல் நீரோ கண்மணியே நேசமான மனைவி, சொந்த தொழில், அன்பான தாய், நலமாய் வாழும் தங்கை, தோள் கொடுக்கும் தோழமை. அதோடு தன் காதல் வாழ்வின் சாட்சியாய் தங்களுக்கு வரப்போகும் குழந்தை என சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த வெற்றியை அடித்து கீழே தள்ளியது, பிரசவத்தில் மரணித்த தன் மனைவி தியாவின் முடிவு. அதற்கு மேல் மற்றொரு அதிர்ச்சி தியாவின் கடைசி ஆசையாய் அவள் தன் தமக்கையை மறுமணம் செய்யக் கூறியது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அவளையே எப்படி மணந்து கொள்வான்? அதன் பின் அவன் வாழ்வில் சந்தோஷம் இருக்குமா? Loving Wife, Succesful Business, Affectionate Mother, Happily settled sister, Understanding Friends. What more a person need? Vetri is blessed with a baby as a proof of his love with his wife. But all his happiness in cloud nine is doomed, when his wife died in child birth. More than that, his wofe's last wish for him to marry her elder sister Natchathra. The same person, whom he never wanted to meet in life ever. What will happen in Vetri's life? Will he see happiness in life again? Author: Uma Nathan Narrator: Rajeswari Ramkumar Publisher: Aurality Itsdiff Entertainment

    யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு - Yudhishtram

    Play Episode Listen Later Jul 28, 2024 23:47


    download FREE aurality app today to enjoy these Tamil Historical Novel play.google.com/store/search?q=aurality&c=apps Title: Yudhishtram Subtitle: Short Story Collection வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author:Vidya Subramaniam Narrator:Pushpalatha Parthiban Audiobook Publisher: Itsdiff Entertainment / Aura;lity Book/ Ebook - swasam

    இராஜேந்திர சோழனுக்கு நண்பனாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது?

    Play Episode Listen Later Jul 27, 2024 18:36


    Mithran மித்ரன் (வரலாற்று நாவல்) https://play.google.com/store/audiobooks/details/Sira_Mithran?id=AQAAAEAylHLUUM download FREE aurality app today to enjoy these Tamil Historical Novel https://play.google.com/store/search?q=aurality&c=apps இராஜேந்திர சோழனுக்கு நண்பனாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி ஒருவனே மித்ரன். மாமன்னர் இராஜேந்திர சோழன் கங்கை படையெடுப்பு செய்தார், கடாரம் மற்றும் ஸ்ரீ விஜயத்தை வென்றார். அத்துடன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புது தலைநகரை உருவாக்கினார். இந்த வரலாற்றுச் செய்திகளை வைத்து, கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்தையும் கோத்து, மித்ரனின் பயண வழியாக்கி, இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் சிரா. இராஜேந்திர சோழனைப் பற்றிப் பேசிய நூல்களில் மித்ரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதன் கதைக்களம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதே அதன் காரணம். மித்ரன் உங்களை வசீகரிப்பான். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் an Aurality Production Author: Sira Narrator: Pushpalatha Parthiban Audiobook Publisher: Aurality / Itsdiff Entertainment book/ ebook - swasam Pathipagam/ Padhipagam

    காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும்.

    Play Episode Listen Later Jul 24, 2024 11:38


    https://play.google.com/store/audiobooks/details/Vidya_Subramaniam_Kasi_Tamil_Sangamam?id=AQAAAEDSZx4n3M Kasi Tamil Sangamam காசி தமிழ்ச் சங்கமம் காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல. நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் சுவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்ரமணியம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Vidya Subramaniam Narrator: Pushpalatha Parthiban Publisher: Aurality / Itsdiff Entertainment

    பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சம் - Nerungi Varum Idiyosaii

    Play Episode Listen Later Jul 23, 2024 20:47


    #Auralityaudio #auralitytamilstory #tamilaudiobook https://play.google.com/store/audiobooks/details/Sethupathi_Arunachalam_Nerungi_Varum_Idiyosai?id=AQAAAEDS5UGlgM Title: Nerungi Varum Idiyosai Subtitle: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் நெருங்கி வரும் இடியோசை (நாவல்) “நான் ஏழு நாளா ஒன்னுமே சாப்டல. சின்னச் சின்ன மீன், நத்தைங்கள்லாம் பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ அதெல்லாமும் குறைஞ்சு போச்சு. தாமரைக்குளம் இருக்குல்ல, அதெல்லாம் இப்போ வெறும் சேறும் சகதியுமாய்டுச்சு. சின்னப் பசங்க, பொண்ணுங்க எல்லாம் கழுத்தளவு தண்ணில நின்னுக்கிட்டு மீன், நத்தையெல்லாம் கிடைக்காதான்னு அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாம் காலி. சின்னக் குழந்தைகள்லாம் கரையில உக்காந்து அழுதுக்கிட்டு இருக்காங்க. அதுங்க அழுகைய நிறுத்தறதுக்காக, அம்மாக்காரிங்கள்லாம் பச்சை நத்தையைப் பிடிச்சு அவங்க வாய்ல திணிச்சிட்டு, இன்னும் கிடைக்குமான்னு குளத்துக்குள்ள போறாங்க. அதையெல்லாம் சாப்பிட்டு எத்தனையோ குழந்தைங்க செத்துப் போய்டுச்சு.” பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல். வங்க மூல நாவலான ‘ஆஷானி சங்கேத்' நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவலில், பஞ்சம் எடுத்த எடுப்பிலேயே நம்மைப் பதறச் செய்யும் நோக்கத்தில் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, எளிமையான உரையாடல்கள் மூலமும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வது மூலமும் மெல்ல மெல்லப் பஞ்சம் அறிமுகமாகிறது. தெளிவான நீர் உள்ள குளம் ஒன்றில் மெல்ல மெல்லப் படரும் வெங்காயத் தாமரை போல. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பஞ்சத்தின் தீவிரமும் நம்மை வந்தடையும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பதற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களைத் தவிர, இம்மனிதர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும், நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒத்ததுதான். அதனால் இந்நாவலை நம் ஊரில் நிகழும் ஒரு கதை என்ற அளவில் நம்மால் எளிதாக அணுக முடிகிறது. எழுத்தாளர் பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா எழுதி சேதுபதி அருணாசலம் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sethupathi Arunachalam Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment

    பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரன் - Maharadhan Promo

    Play Episode Listen Later Jul 20, 2024 11:27


    Title: #Auralityaudio #auralitytamilstory #tamilaudiobook Maharadhan மகாரதன் - https://play.google.com/store/audiobooks/details/Siraa_Maharadhan?id=AQAAAEAyyiyKDM மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் an Aurality Production Author: Siraa Narrator:Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment

    1975 Emergency அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன

    Play Episode Listen Later Jul 19, 2024 73:01


    1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam https://play.google.com/store/audiobooks/details/R_Radhakrishnan_1975_Emergency_Nerukkadi_nilai_Pra?id=AQAAAEDS2guayM Subtitle: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் Series Name: Not Set Series Entry: Not Set Description: இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை' என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்' என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது. எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: VVR Publisher: Itsdiff Entertainment

    சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது

    Play Episode Listen Later Jul 17, 2024 9:35


    Vinayak Damodar Savarkar https://play.google.com/store/audiobooks/details/Saadhu_Sriram_Vinayak_Damodar_Savarkar?id=AQAAAEDSSCwI7M விநாயக் தாமோதர் சாவர்க்கர் Series Name: Not Set Series Entry: Not Set Description: சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saadhu Sriram Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை

    Play Episode Listen Later Jul 16, 2024 7:59


    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் https://play.google.com/store/audiobooks/details/Sudhakar_Kasturi_Natesa_Pillaiyin_Naatkurippukal?id=AQAAAEDSSkwKjM Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை. எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sudhakar Kasturi Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment

    ‘புத்தரின் ஜாதகக் கதைகள் - நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன

    Play Episode Listen Later Jul 15, 2024 4:08


    https://play.google.com/store/audiobooks/details/Latha_Kuppa_Buddharin_Jataga_Kathaigal?id=AQAAAEDSOhB60M Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality புத்தரின் ஜாதகக் கதைகள் புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்டதுதான் ‘புத்தரின் ஜாதகக் கதைகள்.' புத்தரின் ஜாதகக் கதைகளில் முக்கியமான கதைகள் எளிமையான வடிவில் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. லதா குப்பா ஜாதகக் கதைகளின் அடிநாதத்தைச் சிதைக்காமல் இக்கதைகளை எழுதி உள்ளார். எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Latha Kuppa Narrator: Uma Maheswari Publisher: Itsdiff Entertainment

    நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன ?

    Play Episode Listen Later Jul 13, 2024 62:59


    இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஹர்ஷத் மேத்தா நிரவ்மோடி டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) சாரதா சிட்ஃபண்ட்ஸ் சந்தா கோச்சார் கார்வி கேதன் பரேக் எ.பி.ஜி ஷிப்யார்ட் கிங் பிஷர் நிதி மோசடி மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: N. Gopalakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    dhfl
    ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு

    Play Episode Listen Later Jul 12, 2024 5:43


    Get it on Google play https://play.google.com/store/audiobooks/details/Latha_Kuppa_Ramayana_Kathaigal?id=AQAAAEDSOiB64M Download in Aurality app - play.google.com/store/apps/detail….itsdiff.aurality ராமாயணக் கதைகள் பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம். லதா குப்பாவின் முதல் புத்தகமான 'மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம். எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Author: Latha Kuppa Narrator: Sukanya Karunakaran Publisher: Itsdiff Entertainment

    தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் பதிவு செய்யும் புத்தகம்

    Play Episode Listen Later Jul 11, 2024 5:09


    Download on Aurality https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality Listen via Google play https://play.google.com/store/audiobooks/details/Kamaraj_Mani_Thabaalthalai_Saathanaiyaalargal?id=AQAAAEBSg3LDMM இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி. எழுத்தாளர் காமராஜ் மணி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Kamaraj Mani Narrator: VVR Publisher: itsdiff Entertainment

    மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார்.

    Play Episode Listen Later Jul 10, 2024 9:54


    Download on Aurality https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality Listen via Google play https://play.google.com/store/audiobooks/details/Suka_Moongil_Moochu?id=AQAAAEDS6AeoxM மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா? வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி. - வண்ணதாசன் சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை சுகாவின் குரலிலேயே கேட்கலாம் வாருங்கள் Author: Suka Narrator: Suka Publisher: Itsdiff Entertainment

    சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை பற்றிப் பேசும் இந்தப் புத்தகம்

    Play Episode Listen Later Jul 10, 2024 6:25


    Get it on Google play https://play.google.com/store/audiobooks/details/Sakthivel_Rajakumar_Subash_Chandra_Bose_Maraikkapp?id=AQAAAEDSNGF0oM Download in Aurality app - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏழு பத்தாண்டுகளில், ஒருவரின் மரணத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறிய மொத்தம் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டது சுபாஷுக்கு மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள், சுபாஷின் சாகசங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதி இருக்கிறார் சக்திவேல் ராஜகுமார். சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருகிறது. எழுத்தாளர் சக்திவேல் ராஜகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sakthivel Rajakumar Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    சீனா படையெடுப்பும் அதன் பின்னணியும் Article 370 Indiyavin KAshmir

    Play Episode Listen Later Jul 5, 2024 16:41


    காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? Description: மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்? ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன? காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா? இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா? ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் DR உ.வே.சா

    Play Episode Listen Later Jul 3, 2024 11:24


    Tamil Thaatha -நம் தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான மனிதர் ‘தமிழ்த் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். தமிழ் மொழியின் சொத்துகளான பல அரிய காப்பியங்களும் புராணங்களும் ஓலைச்சுவடிகளாகப் பல இடங்களில் முறையாகத் தொகுக்கப்படாமல் சிதறிக்கிடந்தன. அவற்றையெல்லாம், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினாலும், நமது இலக்கியங்கள் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினாலும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆராய்ந்து, தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்தார் உ.வே.சா. இவரது தன்னலமில்லாக் கடின உழைப்பினால்தான் பல காப்பியங்கள், பல அரிய நூல்கள் இன்று நம்மிடையே உள்ளன. இல்லையென்றால் இவையெல்லாம் என்றோ அழிந்து போயிருக்கும். ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் உ.வே.சா. அப்படிப்பட்ட பேரறிஞரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், தமிழ்ச் சேவைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நேர்த்தியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். எழுத்தாளர் சைதை முரளி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saidhai Murali Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை Agasthiya Yathirai

    Play Episode Listen Later Jul 2, 2024 9:53


    வேதம் பிறந்தபோதே அகஸ்தியரும் தோன்றி விட்டார். இமயம் முதல் குமரி வரை அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை. விந்திய மலையைக் கடந்ததன் மூலம் பாரத தேசத்தில் வடமுனைக் கோடி இமயத்திலிருந்து தென்முனைக் கோடி பொதிகை வரையில் ஓர் மிகப் பெரிய இணைப்புப் பாலமாக அகஸ்தியர் விளங்கினார். சங்ககாலச் செய்யுள்களில் அகஸ்தியர் இடம் பெற்றுள்ளார். அகஸ்தியரின் பெயரைக் குறிப்பிடாமல் எந்தவொரு மருத்துவ நூலும் கடந்த நூற்றாண்டுகளில் இல்லை. பாரதத்தில் மட்டுமின்றி ஈழம், சாவகம், கடாரம், மலாய் நாடுகளிலும் அகஸ்தியர் குறித்த சான்றுகள் உள்ளன. அகஸ்தியரைக் குறித்துப் பற்பல தகவல்கள் செய்திகளாக, இலக்கியச் சான்றுகளாக, கட்டுக் கதைகளாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு அவரது இமயம் முதல் பொதிகை வரையிலான பயணத்தைக் கூறும் நூல் இது. சித்தராக, மருத்துவராக, தமிழுக்கு ஆதி இலக்கண நூல் படைத்தவராக அறியப்படும் அகஸ்தியரின் பயணத்தை முழுமையாக, இலக்கியச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன். எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Sathiyapriyan Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment

    பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள்

    Play Episode Listen Later Jul 1, 2024 10:55


    பரிந்தர குமார் கோஷ் - அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். ஸ்ரீ அரவிந்தரின் இளைய சகோதரர். ஏறத்தாழ 12 ஆண்டுகாலம் அந்தமானில் கொடுமையான தீவாந்தர தண்டனைக்கு உள்ளானவர். அவரது சிறை அனுபவங்களே இந்த நூல். அந்தமான் சிறை என்பது ஒரு நரகம். தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பது, செக்கிழுப்பது போன்ற கொடுமைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தற்கொலை முயற்சிகள், கைதிகளின் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் என உயிர்ப்போராட்டத்தின் வலி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்த அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த பரிந்தர், தனது சக சிறைவாசிகளான உல்லாஸ்கர் தத்தாவின் மனப்பிறழ்வு, இந்துபூஷன் ராயின் தற்கொலை, ஜதீஷ் சந்திரபாலுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். வலி நிறைந்த சிறை வாழ்க்கையினை விவரிக்கும் பரிந்தரின் சிறப்பு, சோதனைகளைக் கூட ‘இதுவும் ஓர் அனுபவம்' என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம். இந்த உணர்வு நம்மை அதிசயிக்க வைக்கிறது. The tale of my exile என்று பரிந்தர் குமார் கோஷ் எழுதிய அனுபவங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஜனனி ரமேஷ். எழுத்தாளர் பரிந்தர் குமார் கோஷ் எழுதி ஜனனி ரமேஷ் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

    அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்.: Arasiyal Anmiga MGR

    Play Episode Listen Later Jun 30, 2024 4:50


    எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது. எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது.

    சத்ரபதி சிவாஜி - Chhathrapathi Shivaji

    Play Episode Listen Later Jun 10, 2024 19:58


    Download FREE aurality ( mobile app for tamil audiobook) and podcasting - enjoy great tamil literature we have over 450 + content to help preserve rich indian tamil literature சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு. எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Author: Ananthasairam Rangarajan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    1919 Il Nadanthadhu ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள்

    Play Episode Listen Later Jun 9, 2024 11:45


    ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை. வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார். இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார். தன் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மண்டோ எழுதியது: ‘இங்கே ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ உறங்குகிறான். இத்துடன் அவனது சிறுகதைகளின் கலையும் துயரங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அவன், இரண்டு பேரில் யார் சிறந்த சிறுகதையாளன் என்று ஆச்சரியப்படுகிறான். கடவுளா அல்லது அவனா?' இதில் உள்ள சிறுகதைகள்: டோபா டேக் சிங் மம்மது பாய் 1919ல் இது நடந்தது அவமானம் இட்ட வேலை இறுதி சல்யூட் இறைவன் மீது ஆணை கருப்பு சல்வார் காட்டுக் கற்றாழை சிராஜ் சுதந்திரத்தின் விலை டெல்லிப் பெண் திற... தீர்க்கதரிசி தோழன் நூறு வாட் பல்பு பத்து ரூபாய் போர் நாய் மொஸெல் சில்லிட்ட இறைச்சி எழுத்தாளர் ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ எழுதி பென்னேசன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Saddath Hassan Mantto Narrator: Sukanya Karunakaran Publisher: Itsdiff Entertainment

    Adolf Hitler - அடால்ஃப் ஹிட்லர்

    Play Episode Listen Later Jun 8, 2024 20:31


    Listen to these and other wonderful tamil biography and historical content as audiobooks in Aurality app ( available on google play store and Apple store ) Aurality Infotainment Aurality அடால்ஃப் ஹிட்லர் எந்த ஒரு பெயரைக் கேட்டவுடனே உங்கள் மனதில் ஒரு வெறுப்பு பரவும் என்று கேட்டால், உலகம் முழுக்க அனைவரும் சொல்லும் பெயர் இதுதான். ஏன் அப்படி? கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஹிட்லருக்கு வந்தது? யூதர்களை ஏன் ஹிட்லர் வேட்டையாடினார்? உலகமே அஞ்சி நடக்கும் வதை முகாம்களை ஏன் உருவாக்கினார்? அங்கே மக்கள் எப்படி கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்? ஹிட்லரின் இறுதி 105 நாட்களில் நடந்தது என்ன? ஹிட்லரின் ஏழ்மையான இளமைக் காலம், அவரது அரசியல் எழுச்சி, அன்றைய உலக அரசியல் நிலை, இரண்டாம் உலகப் போர் அரசியல், அதைத் தொடர்ந்து இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வது வரையிலான ஒட்டுமொத்த வரலாற்றையும் விவரிக்கிறது இந்த நூல். ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் எழுதி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Author: Ananthasairam Rangarajan Narrator: VVR Publisher: Itsdiff Entertainment

    Sundar Pichai | சுந்தர் பிச்சை

    Play Episode Listen Later Jun 8, 2024 9:03


    Download Aurality app for tamil audiobooks via google play and or apple play store Google - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர். இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும். எழுத்தாளர் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: G.S. Sivakumar Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    All about Ayodhi - அயோத்தி (அ முதல் ஃ வரை)

    Play Episode Listen Later Jun 7, 2024 11:21


    முன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ‘சர்ச்சைக்குரிய இடம்' என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை. அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை? பாபர் மசூதியின் வரலாறு என்ன? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை? இந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? அயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது. இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும். எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    Scene 9 of 9 - Mohammad Bin Thuglaq Tamil Play (திரு. சோ அவர்களின் முகம்மது பின் துக்ளக்)

    Play Episode Listen Later Jun 1, 2024 3:30


    This is a political Sattire written by Thiru Cho. Download free Aurality (mobile app for tamil audiobooks) - google play store, ios app store Disclaimer All views, opinions expressed through this play belongs to Mr.Cho and their playwright team and do not necessarily express as the participants in this play reading or that of the production team BArts and Aurality Sharing this for educational awareness purposes only

    Claim Tamil Audio Books

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel