SBS Tamil - SBS தமிழ்

Follow SBS Tamil - SBS தமிழ்
Share on
Copy link to clipboard

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

SBS Tamil


    • Jul 14, 2025 LATEST EPISODE
    • daily NEW EPISODES
    • 8m AVG DURATION
    • 6,219 EPISODES


    Search for episodes from SBS Tamil - SBS தமிழ் with a specific topic:

    Latest episodes from SBS Tamil - SBS தமிழ்

    தெற்கு ஆஸ்திரேலியா வாகன விபத்தில் சர்வதேச மாணவர் பலி!

    Play Episode Listen Later Jul 14, 2025 2:12


    தெற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    நாட்டில் அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் யார்?

    Play Episode Listen Later Jul 14, 2025 2:42


    ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்( ATO) வெளியிட்ட தரவுகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் Tradie Jobs எவையென்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    ஏன் GSTஐ அதிகரிக்க வேண்டும்?

    Play Episode Listen Later Jul 14, 2025 8:14


    25 ஆண்டுகளுக்கு முன்னர் Goods and Services Tax, அல்லது GST என்ற பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வரி இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் நிதி நிலை கட்டமைப்பில் இருக்கும் பற்றாக்குறையைக் குறைக்க, அதன் வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஒரு வழியாக GSTஐ 10 சதவீதத்திலிருந்து உயர்த்துவது குறித்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆளும் Labor கட்சி அரசியல்வாதிகள் அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், அதை அதிகரிப்பது நல்லது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    ஐரோப்பா மற்றும் மெக்ஸிகோ மீது 30% இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

    Play Episode Listen Later Jul 14, 2025 4:46


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

    இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    Play Episode Listen Later Jul 14, 2025 9:25


    இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முதல் கட்ட அறிக்கை வெளியீடு - அதிர்ச்சி தகவல்கள்; திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டம் - விஜய் அதிரடி பேச்சு; தமிழக பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது. `ப' வடிவில் மாறும் பள்ளி இருக்கைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

    SBS 50: எங்கள் எண்ணத்தில் SBS ஒலிபரப்பின் பயணம்

    Play Episode Listen Later Jul 13, 2025 13:56


    SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கிவரும் SBS 50 எனும் கொண்டாட்டத் தொடரின் நிறைவு நிகழ்ச்சி. SBS நிறுவனம் 50 ஆண்டுகளாக பல்லின, பன்மொழி ஊடகமாக வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய பன்மொழி ஊடகமாக திகழும் இவ்வேளையில் நம்முடன் பணியாற்றிய செய்தியாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள். கருத்துக்களை முன்வைப்பவர்கள்: அபிராமி, விக்ரமசிங்கம், மேகா, செல்வநாதன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.

    ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    Play Episode Listen Later Jul 11, 2025 6:00


    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 – 12 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

    How to start your home business in Australia - வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்க விரும்புகிறீர்களா?

    Play Episode Listen Later Jul 11, 2025 10:12


    Did you know that people offering taxi services from home need to register for Goods and Services Tax (GST)—regardless of how much they earn? Or that a fitness instructor needs local council approval to see clients at home? In this episode, we unpack the basic rules you need to know when setting up a home-based business in Australia. - உங்கள் வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விதிமுறைகள் மற்றும் முக்கிய படிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    ஆஸ்திரேலியா அறிவோம்: Daintree மழைக்காடு

    Play Episode Listen Later Jul 11, 2025 7:22


    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகவும் பழமையான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ள, Daintree Rainforest அமைந்துள்ளது. இது குறித்த தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.

    ஒரேநேரத்தில் 16 விடயங்களை கவனிக்க முடியும் என்பது தமிழ்க்கலை என்பது தெரியுமா?

    Play Episode Listen Later Jul 11, 2025 14:11


    உங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்திருக்க ஒரு கவனகரால் முடியும். இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறனை, இராம.கனக சுப்புரத்தினம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது குறித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.இராம.கனக சுப்புரத்தினம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பான நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

    விமானப் பயணங்களில் பவர் பேங்குகள் குறித்து மாறியுள்ள விதிமுறைகள் யாவை?

    Play Episode Listen Later Jul 11, 2025 6:47


    தற்போது தொடங்கியுள்ள பாடசாலை விடுமுறை காலத்தில், விமானப் பயணங்களை திட்டமிடும் ஆஸ்திரேலியர்கள், தங்களுடன் எடுத்துச் செல்லும் லித்தியம் பேட்டரிகள் கொண்ட power bank உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்வதில் உள்ள விதிமுறைகள் மற்றும் அபாயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் இதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    ஆசியான் நாடுகளுடனான வர்த்தக உறவை அதிகரிக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது

    Play Episode Listen Later Jul 11, 2025 4:04


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    Play Episode Listen Later Jul 11, 2025 8:38


    இலங்கையின் புதிய அரசாங்கத்திலும் தமிழர் பகுதியில் தொடரும் சிங்கள குடியேற்றம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களின் குற்றச்சாட்டு; செம்மணியில் தொடரும் அகழ்வில் 60 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுப்பு; செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    Play Episode Listen Later Jul 10, 2025 7:25


    காசா பேச்சுவார்த்தை; செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்; அமெரிக்காவில் பெரு வெள்ளம்; ஐரோப்பியாவில் வெப்ப அலை; பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி- டிரம்ப் எச்சரிக்கை; கென்யாவில் தீவிரமடையும் போராட்டம்; துருக்கிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

    தங்கத்தாத்தா

    Play Episode Listen Later Jul 10, 2025 5:47


    இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று “தங்கத்தாத்தா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் நினைவுதினம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

    எதற்கும் கவலைப்படுபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது!

    Play Episode Listen Later Jul 10, 2025 10:57


    உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் டாக்டர் துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி

    காளான் சமைத்து மூவரைக் கொன்ற Erin Pattersonனின் பின்னணி என்ன?

    Play Episode Listen Later Jul 10, 2025 9:13


    விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்து மூன்று பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Erin Patterson யார் அவரின் பின்னணி என்ன? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    பூர்வீகக் குடி மக்களுக்குத் தொலைநோக்குப் பார்வை

    Play Episode Listen Later Jul 10, 2025 12:20


    இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. 2015ஆம் ஆண்டின் Australian of the Year விருதுக்கான தேர்வில் மேற்கு ஆஸ்திரேலியாவில் இறுதிச் சுற்றில் தேர்வு பெற்றவரும், Australian e-Health Research Centreஇல் ஆராய்ச்சியாளராகவும், Harvard பல்கலைக்கழகத்திலும் Notre Dame பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றும் பேராசிரியர் கனகசிங்கம் யோகேசன், பூர்வீக மக்களுடன் கண்பார்வை குறித்து தனது செயற்பாடுகள் பற்றியும் NAIDOC வாரம் குறித்த தனது கருத்துகளையும், 2015ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

    australian naidoc national aborigines
    அமெரிக்கா மருந்துகள் மீது இறக்குமதி வரி விதித்தால் அது ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?

    Play Episode Listen Later Jul 10, 2025 4:45


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

    புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்?

    Play Episode Listen Later Jul 9, 2025 12:29


    புரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

    NSW அரசு 250 டொலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது!

    Play Episode Listen Later Jul 9, 2025 2:43


    வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டொலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தை NSW அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    DonateLife வாரம் 2025: நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் கதை

    Play Episode Listen Later Jul 9, 2025 11:41


    உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ள வாரம், DonateLife வாரம் ஆகும். இந்த ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை DonateLife வாரம் நடைபெறுகிறது. இந்த முக்கியமான வாரத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநிலத்தின் Robinvale என்ற இடத்தில் வாழும் பீஜே குடும்பத்தின் எழுச்சியூட்டும் பயணத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

    NAIDOC: பூர்வீகக்குடி மக்களின் சிறப்பைக் கொண்டாடும் வாரம்!

    Play Episode Listen Later Jul 9, 2025 7:40


    NAIDOC வாரம் (National Aboriginal and Islanders Day Observance Committee வாரம்) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடியின மக்களின் பன்முகத்தன்மையும், அவர்களது கலை, கலாச்சாரம், சமூக பங்களிப்புகளும் கொண்டாடப்படும் முக்கியமான வாரமாகும். இந்த ஆண்டு NAIDOC வாரம் ஜூலை 6 முதல் 13ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    Play Episode Listen Later Jul 9, 2025 7:19


    கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து; ரிதன்யா தற்கொலை விவகாரம்; பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவின் விளக்கம்; சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறும் டிரம்ப்; மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

    காவல் துறையில் நிறவெறி உள்ளது என ஒப்புக்கொண்ட NT காவல்துறை தலைவர்!

    Play Episode Listen Later Jul 9, 2025 4:47


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

    NSW ரயில் பயணிகளுக்கு இரு நாட்கள் இலவச பயணச்சலுகை!

    Play Episode Listen Later Jul 8, 2025 2:46


    நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் ரயில் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு மட்டுமான இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

    Play Episode Listen Later Jul 8, 2025 2:17


    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    $1.5 மில்லியன் செலவில் காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டதை அரசு நியாயப்படுத்தியது

    Play Episode Listen Later Jul 8, 2025 4:19


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson குற்றவாளி என தீர்ப்பு

    Play Episode Listen Later Jul 7, 2025 2:39


    விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    'கீழடியின் தொன்மை – உலகத் தொல்லியல் நிபுணர்கள் ஏற்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கேள்வி கேட்கி

    Play Episode Listen Later Jul 7, 2025 13:04


    பத்தாவது உலக தொல் பொருள் மாநாடு (WAC-10), ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டார்வின் நகரில் நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,200ற்கும் மேற்பட்ட தொல் பொருள் ஆய்வாளர்கள் நேரடியாகவும், மற்றும் சுமார் 3,000 பேர் இணைய வழியாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குனர் இராமலிங்கம் சிவானந்தம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

    குழந்தை பராமரிப்பு மையங்கள்: பாதுகாப்பு முக்கியமா? இலாபம் முக்கியமா?

    Play Episode Listen Later Jul 7, 2025 7:31


    மெல்பனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள Point Cook இலுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இரண்டு வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் மீது, 26 வயதான Joshua Dale Brown என்பவர் 70ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்புத் துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி அறிமுகப்படுத்த மாநில மற்றும் ஃபெடரல் அமைச்சர்கள் முனைந்து வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

    நாட்டின் வட்டி வீதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்படுமா?

    Play Episode Listen Later Jul 7, 2025 4:23


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 07/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

    இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    Play Episode Listen Later Jul 7, 2025 9:37


    மத்திய பாஜக அரசு இந்தியை திணிப்பதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு - பணிந்தது மத்திய பாஜக அரசு; தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாக தான் இருக்கும் என்று தவெக விஜய் அறிவிப்பு, தந்தை மகன் உச்சகட்ட மோதல் - உடைந்து சிதறும் பாட்டாளி மக்கள் கட்சி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

    ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    Play Episode Listen Later Jul 5, 2025 5:08


    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (29 ஜூன்– 05 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி.

    திபெத்தின் ‘தலாய் லாமா' அமைப்பின் பின்னணியும் இன்றைய சிக்கலும்!

    Play Episode Listen Later Jul 4, 2025 11:06


    திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய்லாமா, ‘தலாய் லாமா அமைப்பு தொடரும்' என்று அறிவித்திருக்கிறார். இதன் முக்கியத்துவம் தொடர்பிலும் திபெத்தின் ‘தலாய் லாமா' அமைப்பின் பின்னணி தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசல்

    இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    Play Episode Listen Later Jul 4, 2025 8:50


    காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் முன்மொழிவும் ஹமாசின் பதிலும்; இந்தோனேசியாவில் படகு விபத்து; மாலியில் ஜிகாதிய குழுவின் தாக்குதல்கள்; தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்; உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை கட்டுப்படுத்திய அமெரிக்கா; காங்கோ ஜனநாயக குடியரசு- ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அரியவகை கனிமங்களும் சீனாவும் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

    இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    Play Episode Listen Later Jul 4, 2025 8:38


    யாழ். செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள். தொடர்ந்தும் மனித எச்சங்கள் மீட்பு; நாடாளுமன்றத்தில் எதிரொலித்த செம்மணி விவகாரம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    பாரதி பள்ளியின் நாடக விழாவும் 'பாப்பா பாரதி' காணொளி வெளியீடும்!

    Play Episode Listen Later Jul 4, 2025 7:35


    பாரதி பள்ளியின் இளைய மாணவர் நாடக விழாவும் 'பாப்பா பாரதி' YouTube காணொளி வெளியீடும் மெல்பனில் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் பாரதி பள்ளியின் இயக்குனர் மற்றும் அதிபர் மாவை நித்தியானந்தனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை நிறுத்த, சீர்திருத்தங்களுக்கு அழைப்பு

    Play Episode Listen Later Jul 4, 2025 5:00


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 04/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    வருமான வரி கணக்குத் தாக்கல்: 'காத்திருப்பது நல்லது' நிபுணர்கள்

    Play Episode Listen Later Jul 3, 2025 5:41


    புதிய நிதியாண்டு பலரும், வருமான வரித்துறையிடமிருந்து ஒரு தொகை வந்துவிடும் என்ற நம்பிக்கையில், தங்கள் வரிவிதிப்புக் கணக்கை உடனே தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை சற்றுக் காத்திருப்பது நன்று என்று நிபுணர்கள் தெரிவித்துளார்கள். இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

    Opal கட்டணம் மீண்டும் அதிகரிப்பு!

    Play Episode Listen Later Jul 3, 2025 2:28


    சிட்னி பயணிகளின் Opal கட்டணங்கள் ஜுலை 14 முதல் உயர்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Torres Strait தீவு மக்களின் கொடியுடன் புதிய $2 நாணயம் வெளியீடு!

    Play Episode Listen Later Jul 3, 2025 3:05


    Torres Strait தீவு மக்களின் கொடியை நினைவுகூரும் புதிய $2 நாணயத்தை Royal Australian Mint இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    First Nations representation in media: What's changing, why it matters - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதித்துவம்: என்ன மாறுகிற

    Play Episode Listen Later Jul 3, 2025 9:10


    The representation of Indigenous Australians in media has historically been shaped by stereotypes and exclusion, but this is gradually changing. Indigenous platforms like National Indigenous Television (NITV) and social media are breaking barriers, empowering First Nations voices, and fostering a more inclusive understanding of Australia's diverse cultural identity. Learning about these changes offers valuable insight into the country's true history, its ongoing journey toward equity, and the rich cultures that form the foundation of modern Australia. Understanding Indigenous perspectives is also an important step toward respectful connection and shared belonging. - ஊடகங்களில் பூர்வீகக் குடிமக்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுவதை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். ஆனால் இது படிப்படியாக மாறி வருகிறது. தேசிய பூர்வீகக்குடி தொலைக்காட்சி (National Indigenous Television - NITV) மற்றும் சமூக ஊடகங்கள் பல தடைகளை உடைத்து பூர்வீகக் குடிமக்களின் குரல்களை மேம்படுத்தி, ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளம் குறித்த புரிதலை வளர்த்து வருகின்றன. இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது, நாட்டின் உண்மையான வரலாறு, சமத்துவத்தை நோக்கிய அதன் தொடர்ச்சியான பயணம் மற்றும் நவீன ஆஸ்திரேலியாவின் அடித்தளத்தை உருவாக்கும் வளமான கலாச்சாரங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது. பூர்வீகக் கண்ணோட்டங்களைப் புரிந்து கொள்வது மரியாதைக்குரிய இணைப்பு மற்றும் பகிரப்பட்ட சொந்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.

    ஆஸ்திரேலியாவை விட்டு அதிகமானோர் வெளியேறுவதற்கான காரணம் என்ன?

    Play Episode Listen Later Jul 3, 2025 9:15


    கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 70,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலியா புள்ளியியல் பணியகத்தின் தரவு கூறுகிறது. பல ஆண்டுகளாக அதிகரித்து காணப்பட்ட சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அரசின் கொள்கை கட்டுபாட்டினால் தற்போது நிலைபெற ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    குழந்தைகளை முடக்கும் டிஜிட்டல் கருவிகள்

    Play Episode Listen Later Jul 3, 2025 12:59


    Smartphone, Ipad போன்ற டிஜிட்டல் கருவிகளை வளரும் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தினால் அதற்கு அவர்கள் அடிமையாகி விடுவதைவிட அதனால் அவர்களுக்கு உடல் மற்றும் உள நல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வகையான கருவிகளை அதிகமாக குழந்தைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு நாள்

    Play Episode Listen Later Jul 3, 2025 11:50


    உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், வறுமை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட உலகளாவிய மக்கள்தொகை பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான உலக மக்கள்தொகை தினத்தின் கருப்பொருள் "பெண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது?" என்பதாகும். தாய்வழி சுகாதாரம், இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு நாள் குறித்து, எமது நேயர்களின் கருத்துகளுடன் 2018ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் படைத்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது. அந்த வருடத்திற்கான கருப்பொருள், "குடும்ப திட்டமிடல் ஒரு மனித உரிமை" - “Family Planning is a Human Right” என்பது நோக்கத்தக்கது.

    தமிழ்த் தடம்: இரு நகரங்களின் கதை

    Play Episode Listen Later Jul 3, 2025 6:26


    தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்த காவியம் இரு நகரங்களின் கதை என்று தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் காரணங்களை முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.

    Qantas மீது இணையத் தாக்குதல்: வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன

    Play Episode Listen Later Jul 3, 2025 4:39


    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

    ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் முதல் 10 தொழில்கள் எவை தெரியுமா?

    Play Episode Listen Later Jul 2, 2025 3:42


    ஆஸ்திரேலியாவில் அதிகூடிய வருவாய் ஈட்டும் முதல் 10 தொழில்துறைகளின் பட்டியலை ATO வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    Play Episode Listen Later Jul 2, 2025 8:05


    தமிழகத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழப்பு; அதானி நிலக்கரி சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட 5000 மரங்கள்; இத்தாலி பேஷன் ஷோவில் இந்திய கைவினை செருப்புகள்; இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு; தெலுங்கானா மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து; சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

    மத்திய கிழக்கு பதற்றம் ஆஸ்திரேலியப் பயணிகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?

    Play Episode Listen Later Jul 2, 2025 12:03


    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அப்பகுதிகள் வழியாக செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தொடரும் இந்த பதற்றம் விமான பயணிகளுக்கு எந்த வகையான பாதிப்புகளை கொண்டுவரும் அதனை பயணிகள் எவ்வாறு சமாளிக்கலாம் போன்ற கேள்விகளுக்கு கடந்த 23 வருடங்களாக Helloworld பயண நிறுவனத்தை பல இடங்களில் நடத்தி வரும் யோஹான் சிவா அவர்கள் வழங்கும் பதில்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    Claim SBS Tamil - SBS தமிழ்

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel