One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.
ஒரு பெரிய மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் பின்னால் ஒரு சிறிய விதை உள்ளது. * ஒருவேளை, இன்று உங்கள் கையில் பணம், நேரம், அறிவு, திறன்கள், அனுபவம், நிபுணத்துவம் போன்றவை மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். * ஆனால், நீங்கள் பெரிதாக வளர, உங்கள் கையில் காணப்படும் இந்த சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதிக்க முடியும். * இந்த உலகில் நடக்கும் பெரிய சாதனைகளை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? * இந்த வெற்றிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களும் அடையமுடியுமா என்று யோசிக்கிறீர்களா? * இன்று ஒருவேளை அது சாத்தியப்படாததாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு தெளிவான தரிசனம் மற்றும் கடினமாக உழைத்து தொடர்ந்து முன்னேற ஒரு ஆழமான உறுதிப்பாடும் இருந்தால், நீங்களும் அத்தகைய வெற்றிக் கதையாக மாறலாம். * இன்றைய வரம்புகளைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டாம். * இன்றும் என்றும் கடவுளாய் இருக்கும் இயேசுவைப் பாருங்கள். * உங்கள் திட்டங்களை அவரிடம் ஒப்படையுங்கள். * அவருடைய இரக்கத்தைச்சார்ந்து, உண்மையாகச் செயல்படுங்கள். * மிக விரைவில் நீங்கள் உங்களை ஒரு வெற்றிகரமான நபராகப் பார்ப்பீர்கள். கடவுள் உங்கள் வளங்களை அதிகரிப்பார். * உங்களிடம் திரட்சி காண்ப்படும். * அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம். * நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள்.
There is a tiny seed behind the life cycle of a big tree. * Maybe you've got very little in your hand today. * It could be money, time, knowledge, skills, experience, expertise, etc. * But God can bless these little things to make you grow large. * Are you amazed by all the great achievements going on in this world? * Are you wondering whether you can match any of these successes? * Well. It could be a big NO today. But, If you have a clear vision, a deep determination to work hard and to progress consistently, you too, can become one such success story. * Don't look at your limitations and conclude your future. * Look at Jesus, who is the God of today and tomorrow. * Commit your plans to Him. * Depend on His mercies and keep working sincerely. * Very soon you will see yourself as a successful person. GOD WILL INCREASE YOUR RESOURCES. * You will have plenty at hand. * It is God's desire to bless His children. * Be one among the blessed.
தேவன் உங்களுக்குச் சமீபமாய் உங்கள் அருகிலிருக்கிறாரா? * உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், எப்படிப்பட்டதொரு பிணைப்பை இயேசுவினிடத்தில் கொண்டிருக்கிறீர்கள்? * தூரமான ஒரு இடத்தில் பயப்படத்தக்கவரும், ஆராதிக்கப்படத்தக்கவருமான ஒரு கடவுளாக இருக்கிறாரா? அல்லது * உங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரா? அல்லது * ஆபத்து வரும்போது மாத்திரம் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி, நீங்கள் நினைப்பூட்டப்படக்கூடியவரா? நம் ஒவ்வொருவரையும் தேவன் முக்கியமாய்க் கருதுகிறார் என்றும், அதனோடுகூட அவர், தனிப்பட்ட நேரத்தையும், வெளிப்படையான பேச்சையும், மற்ற காரியங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளுவதையும் வெகுவாய் (எதிர்பார்க்கிறார்) விரும்புகிறார் என்றும் உங்களுக்குத் தெரியுமா? * தமது அன்பைக் காண்பிக்கும்படி, தமது சொந்த ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்க் கொடுத்திருக்கிறார். * உங்களைத் தமக்கு பிரியமான பிள்ளையாய் அவர் கொண்டிருக்கிறார். * உங்களுக்கும் இதே சிந்தனைகளும் உணர்வுகளும் உண்டா? * அவர் உங்களுடையவர் என்று தைரியமாய் உங்களால் சொல்ல முடியுமா?
* Is God in a far away place to be revered and worshiped? OR * Is He the God you are looking to take your life requirements? OR * Is He a problem solver, you're reminded only when there's a crisis? Do you know, God values each and every one of us individually, and He simply cherishes the personal time, frank talk, sharing etc with Him? * He purchased you by offering His own life on the cross to show His love for you. * He owns you as His beloved Child. * Do you have the same thoughts and feelings? * Can you tell with confidence that He is yours?
* ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார். * அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார். * ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ? * அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான பதில் வரும்படிக்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க, ஒரு செல்வாக்கு நிறைந்தவர் இருக்கக்கூடிய கூட்டத்தைச் சந்திக்க மிகுந்த வாஞ்சையோடிருக்கிறீர்களா? * ஜனங்களைப் பொருத்தமட்டில், உதவியும் உறுதுணையும் இந்தவொரு நபரிடமிருந்து வரும் என்று எந்த நிச்சயமும் கிடையாது. என்றாலும் சில நேரங்களில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றெல்லா நேரங்களிலும் உதவி பெற முடியாது. * நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற நிச்சயத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில், நாம் ஏமாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். அன்பு நண்பரே, * இப்படிப்பட்ட சூழ்நிலையின் வழியாய் நீங்கள் சென்றுகொண்டிருந்தால், * எப்போதும் சார்ந்துகொள்ளக்கூடிய , நம்பத்தக்க தேவனிடத்தில் உங்கள் கண்களைத் திருப்புங்கள். * அவர் இயேசு. அவர் உங்களை ஏமாற்றுவதில்லை. * உங்களுக்குள்ளும் உங்களுக்காகவும் அவர் கிரியை செய்வார். * அவர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் நேர்த்தியாய்ச் செய்வார். * அவர், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் செவிகொடுக்கிறார். அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார். * தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கதறும்போது அவர் அவர்களைப் புறம்பே தள்ளுவதில்லை. * உறுதியோடு ஜெபம்பண்ணுங்கள். தேவன் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.
* We have a prayer answering God. * When we ask Him, He listens to our prayers and therefore He gives us what we ask for. * Are you disappointed with people over their failed promises? * Are you eagerly awaiting the status of your petition to a person in authority? * Are you keen to get an audience with a person of influence to seek help for your problems? * There is no assurance of help and support when it comes to people. Well, sometimes we can get it. We may not have other times. * We may face disappointing moments when we don't even get acknowledgment of our petitions. Dear friend, * If you are going through such situations, * Turn your eyes to the ever-reliable God. * He is Jesus and He will not disappoint you. * He will work in you and for you. * He will make everything perfect in your life. * He listens to every word of yours and will surely answer. * He will not ignore His children when they cry unto Him. * Pray with assurance. God will answer. He is a prayer answering God.
அன்பு தேவ பிள்ளையே, * நீங்கள் ஒரு நோக்கத்திற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அறியீர்களா? * மற்றவரை இரட்சிக்க நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். * நாம் மற்றோரை ஆசிர்வதிக்க ஆசிர்வதிக்கப்ப்ட்டிருக்கிறோம். * இந்த உலகத்தில் நாம் தான் தேவனுடைய பிரதிநிதிகள். * நம்முடைய கிரியைகள் மற்றும் வார்த்தையின் மூலம் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். * நாம் சுயநலமாகவும் எனக்கென்ன என்றும் வாழமுடியாது. * கிறிஸ்துவினால் நாம் பெற்ற வாழ்வை மாற்றும் அனுபவங்களை இவ்வுலகில் பகிர்ந்துகொண்டேயாக வேண்டும். * உலகமெங்கும் போய் இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று, இயேசு தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். * நீங்கள் அவரது சீஷரல்லவா? * நாம் இயேசுவைக் காணும்போது, இவ்வுலகில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான கணக்கை ஒப்புவிக்கவேண்டும். * வெறுங்கையாய் நிற்பீர்களா? அல்லது அவருடைய கட்டளைக்குக் கீழ்படிந்ததினிமித்தம் அவர் பலனளிப்பார் என்ற நிச்சயத்தோடு நிற்பீர்களா? * அறிந்தவர்கள் அறியாதோர் எல்லாருக்கும் நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கத் துவங்கி விட்டீர்களா? * இல்லையென்றால், நீங்கள் அறிவிக்கவேண்டிய தருணம் இதுவே. உலக முழுவதும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, காலத்தை வீணடிக்காமல் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவும். ஆமென்.
Dear child of God, * Don't you know that you've been chosen for a purpose? * We are saved to save others. * We are blessed to be a blessing to others. * We are the ambassadors of God in this world. * Through our work and our words, we are called to witness Christ. * We can not remain aloof and selfish. * We have to share the life changing experiences we had through Christ to the whole world. * Jesus commanded His disciples to go into the whole world to proclaim the good news of Salvation. * Aren't you His disciple? * When we meet Jesus, we have to give account of the life we live in this world. * Will you stand empty-handed or will you stand with the assurance that you will be rewarded for obeying His command. * Have you started sharing the goodness to your known circle and the unknown? * If not, it's high time you started doing it. Go to the whole world and preach the gospel.
* நாம் தாகமாக இருக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம். * பசியாக இருக்கும்போது நமது பசியைப் போக்க அல்லது நம் சுவை மொட்டுகள் மற்றும் வயிற்றை நிரப்ப உணவை சாப்பிடுகிறோம். * ஆம்! எல்லா நேரங்களிலும் நம்மைத் திருப்திப்படுத்த, நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஆதாரம் நமக்கு தேவை. * நம்முடைய முழுப் பிரபஞ்சத்திற்கும் தேவையான அனைத்துப் பொருட்களின் உண்மையான மூலமாக இருப்பது நமது ஆண்டவர். * நம் கற்பனைக்கு அப்பால், அவர் சர்வவல்லவர், சக்திவாய்ந்தவர், வலிமையானவர். * நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கிறீர்களா? * உங்கள் நெருக்கடியைத் தீர்க்க அல்லது வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா? * அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் உடைந்த வாக்குறுதிகளால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? * கையில் கிடைக்கும் ஆதரவின் வரம்புகளால் நீங்கள் சோர்வடைகிறீர்களா? * உங்களிடமுள்ள வளம் நீர்த்துப்போகும் அபாயத்தில் இருக்கிறீர்களா? * இயேசுவே மிகப்பெரிய வளம். * அவரைப் பார்த்து அவருடைய உதவியை நாடுங்கள். * கேளுங்கள், அது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று வேதம் சொல்கிறது. * ஆம்! நீங்கள் இயேசுவைக் கேட்கும்போது, அவர் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார். * உங்களுக்குத் தேவையான அளவு பலப்படுத்தும் சக்தி அவருக்குண்டு.. * நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
* We drink water when we are thirsty. * We eat food to alleviate our appetite while we are hungry or to satisfy our taste buds and tummy. * Yes! We need a resource that satisfies our needs to replenish us at all times. * And our God is the true source of all the necessary supplements for the whole universe. * Beyond our imagination, He is almighty, powerful and strong. * Are you weak and tired? * Do you need helping hands to solve your crisis or to resolve life's problems? * Are you saddened by the broken commitments of the near and dear ones? * Are you discouraged by the limitations of the support available at hand? * Are you in danger of running out of your stocks and resources? * Jesus is the greatest resource. * Look up to Him and seek His help. * Ask and it shall be given to you, says the Bible. * Yes! When you ask Jesus, He will surely help you. * He is powerful enough to strengthen you as long as you need. * You will never be disappointed.
பேச்சு என்பது, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாததொரு பகுதியாயிருக்கிறது. இது, தகவல் தொடர்பிலேயே ஓர் மிகச் சிறந்த வழிமுறையாகும். * ஆனால், பேச்சுக்கள் தவறாக வெளிப்படுவதினால்தான் அநேக வேளைகளில் பிரச்சனைகள் எழும்புகின்றன. * சூழ்நிலைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளும் மொழியும், பிறரைக் காயப்படுத்தி, கற்பனை செய்யக் கூடாத சேதத்தை உறவுகளுக்குள் ஏற்படுத்தியுள்ளன. * தவறான வார்த்தைகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினரிடையேயுள்ள நமது உறவை, நிரந்தரமாகத் துண்டிக்கக்கூடிய வலிமையுடையன. * நீங்கள், உங்கள் கருத்துக்களை வெடுக்கென்று கூறி மற்றோரைக் காயப்படுத்துகிறவரா? * உங்கள் வார்த்தைகள் மற்றும் பேச்சுக்களினிமித்தம், தொழில் சார்ந்த ஐக்கியத்தை உங்களுடன் மேற்கொள்ள முடியாமல் ஜனங்கள் பாதிப்படைந்துள்ளனரா? * நீங்கள், ஜனங்களைச் சந்திக்கவோ அல்லது பதிலளிக்கவோ, கூச்சப்பட்டுத் தடுமாறுகிறீர்களா? * உங்களுடைய காரியங்களைத் தெரியப்படுத்தும் விதம் (பேசும் விதம்) சரியல்லாததினிமித்தம், வேலைப்பழுவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கஷ்டபடுகிறீர்களா? * தேவ உதவிக்காக அவரிடம் மன்றாடுங்கள். * ஏற்ற சமயத்தில் சரியான வார்த்தைகளைச் சொல்லும்படி, அவர் உங்களுக்கு உதவி செய்வார். * எதை எப்படிச் சொல்லவேண்டுமென்று அவர் உங்களுக்குக் கற்பித்து வழிநடத்துவார்.
Speech is an integral part of everyone's life and is one of the most effective means of communication. * But sadly, most of the time, issues begin because of the wrong way of speaking. * Inappropriate words and language have affected others, causing unimaginable damage to relationships. * Wrong words can also cause a permanent breakdown of the relationship between close friends and family members. * Are you a person known to hurt others with your harsh comments? * Is it because of your words and your languages that people are opposed to having business relationships with you? * Are you a shy person who's struggling to face people and answer them? * Are you a person who finds it hard to cope with work pressure because of your communication weakness? * Ask God for His help. * He will help you to speak the right words at the right time. * He will teach you and guide you on what to say and how to say?
* Are you groping in darkness, literally struggling to know where, when and how to proceed further? * Are you left alone with no one around to help you in the most trying times? * Is your life going on a bumpy road? * Are you facing tough situations in your job or business? * Is your marriage going through stormy situations? * Come running to Jesus. * Take refuge in Him. * He promises to turn your darkness into light and your rough situations into smoothness. GOD CAN DO ANYTHING FOR YOU. * Trust in Him. * Humble yourself before Him, and give ears to listen to Him. * Obey Him and follow all His instructions. * You will see your life blossom again, with all the blessings.
* அடுத்து, எங்கே, எப்பொழுது, எப்படிச் செல்வதென்று தெரியாமல், இருளில் தடுமாறுவதுபோல் தவிக்கிறீர்களா? * சோதனை மிகுந்த காலங்களில், உதவிடச் சுற்றிலும் யாருமின்றி, தனிமையில் விடப்பட்டீர்களோ? * உங்கள் வாழ்க்கை, குண்டும் குழியும் நிறைந்த சாலையில் சென்றுகொண்டிருக்கிறதோ? * உங்கள் பணியிலும் தொழிலிலும் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறீர்களோ? * உங்கள் திருமண வாழ்க்கையில் புயல் போன்ற சோதனைகள் வந்ததோ? * இயேசுவை நோக்கி ஓடி வாருங்கள். * அவரில் அடைக்கலம் கொள்ளுங்கள். * உங்கள் இருளை மாற்றி, கரடானதையெல்லாம் செவ்வையாக மாற்றுவதாய் அவர் வாக்குப் பண்னியிருக்கிறார். தேவனால் எல்லாவற்றையும் உங்களுக்குச் செய்யமுடியும். * அவரில் நம்பிக்கையாயிருங்கள். * அவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, அவர் சொல்வதைக் கேட்கச் செவிகொடுங்கள். * அவருக்குக் கீழ்படிந்து, அவரது கட்டளைகளையெல்லாம் பின்பற்றுங்கள். * எல்லா ஆசிர்வாதங்களுடனும் உங்கள் வாழ்க்கை மறுபடியும் பூத்துக்குலுங்குவதை நீங்கள் காண்பீர்கள்.
தேவனே எல்லா ஆசிர்வாதங்களுக்கும் ஊற்றாயிருக்கிறார். * இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் மேலான ஆதாரம் அவர் மட்டுமே. * உதார குணத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் மட்டுமே. * ஒவ்வொருவரு ஜீவனுக்கும் அவர் உணவளித்துக் காப்பாற்றுகிறார். * (இப்படிப்பட்ட) அவர், தமது ஜனங்கள் தம்மை அப்படியே பின்பற்றவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள், * கொடுப்பதிலே உதாரகுணத்தோடிருக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள் (உதவி, விசாரிப்பு, ஆதாரங்கள், பணம் மற்றும் பல காரியங்கள்). * நீங்கள் உதாரகுணமுள்ளவரா அல்லது கஞ்சத்தனம் உள்ளவரா? * எவ்வளவாய்ப் பிறருக்குக் கொடுக்கிறோமோ, அவ்வளவாய் நாம் பெற்றுக்கொள்வோம் * கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், * உங்கள் குழந்தைகள்கூட தயாள குணத்தோடிருக்கக் கற்றுக்கொடுங்கள். * உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; * எவன் நீர்ப்பாய்ச்சுகிறானோ அவனுக்கு நீர்பாய்ச்சப்படும். * நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்போது, தேவன் நம்மை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார். * உங்கள் தேவைகளையெல்லாம் அவர் சந்திப்பார்; உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. * நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாய் விளங்குங்கள்.
God is the source of all blessings. * He is the ultimate resource for the entire universe. * He is the perfect example for generosity. * He provides for everything and everyone without fail. * He also expects His children to imitate His character. As God's child, * You are expected to be generous in your giving (help, care, love, resources, money etc). * Are you a generous person OR are you a stingy person? * The more we give to others, the more we will receive. * Give and it shall be given back to you. * Teach your children also to be generous. * A generous person will prosper; * Whoever refreshes others will be refreshed says the Bible. * When we are faithful in small things, God will make us grow to handle more. * He will provide for all your needs and you shall lack nothing. * Be a blessing to others and stay blessed.
காலை பனி என்பது ஒரு அழகான விஷயம். * அவை குளிர்ச்சியானவை என்று அறியப்படுகின்றன. அவற்றில் ஏராளமான சுவாசக் காற்று (ஆக்ஸிஜன்) உள்ளது. * அதிகாலை வெளிச்சத்தில் அவை வைரங்களைப் போல பிரகாசிப்பது, கிட்டத்தட்ட ஓர் மாயம் போல் தோன்றி, கண்களையும் ஆன்மாவையும் புதுப்பிக்கிறது. * காலை பனியைப் பொறுத்தவரை, வேதம் முக்கியமாகக் கூறுவது, திரட்சியும்(பரிபூரணமும்) தெய்வீக ஆசிர்வதமுமாகும். * இது, ஒரு புத்துணர்ச்சியும், ஆசீர்வாதமும் மற்றும் பரலோகத்திலிருந்து வரும் செய்தியும், வாழ்வின் ஆதாரமுமாம்... * தேவன் தம்முடைய பிரசன்னத்தை, இதமான வானத்துப் பனியுடன் ஒப்பிடுகிறார். * நீங்கள், வறண்டதும் விடாய்த்ததுமானதொரு தரிசு நிலத்தைப் போலப் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கைக்காக ஏங்குகிறீர்களா? * நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு வறட்சியினூடாய்க் கடந்து செல்கிறீர்களா? * நீங்கள் சோர்வடைந்து, வாழ்க்கையின் நோக்கத்தை இழந்துபோனீர்களோ? இயேசுவிடம் திரும்புங்கள். * அதிகாலையில் வந்து அவரைத் தேடுங்கள். * அவர் உங்களைப் புதுப்பிப்பார். ஜீவன் கொடுக்கும் தமது பிரசன்னத்தால் உங்களை உயிர்ப்பித்து, உங்களை மீண்டும் செழிப்பாகவும் வளமாகவும் ஆக்குவார்.
Dew is a beautiful thing. * They are known to be cool, and they contain lots of oxygen. * Sparkling like diamonds on the field in the early morning light, looking almost magical, refreshing the eyes and soul. * As for morning dew, the Bible speaks mainly of bounty and divine blessing. * It is a refreshment, a blessing, and a message from heaven, a source of life. * God compares His presence to that of a soothing heavenly dew. * Are you like a barren field, dry and cracked, longing for a refreshing life? * Are you going through a dry spell in your life? * Are you feeling exhausted and missing the purpose of living? Turn to Jesus. * Come and seek Him early in the morning. * He will refresh you. He will revive you with His life giving presence and shall make you fertile and prosperous again.
அன்பு தேவ பிள்ளையே, * இந்த உலகில், நீங்கள் தனியாக இல்லை. கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். * உங்கள் குடும்பம் உங்களை கைவிட்டாலும், அல்லது உங்கள் உற்றார் உங்களை வெறுத்தாலும், மற்றவர்கள் உங்களை இனி விரும்பவில்லை என்று நீங்கள் நினைத்தாலும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். * சர்வ வல்லமையுள்ள கடவுள் உங்களை பெயர் சொல்லி அழைத்தார் என்பதையும் நீங்கள் அவருக்கு சொந்தமானவர் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறார். * கடவுள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமாக இருப்பது ஆச்சரியமல்லவா? * இந்த உலகில் நமக்கு இன்னும் என்ன தேவை? * நாம் அவருக்கு முழுமையாக நம்மை ஒப்புக்கொடுப்பதன் மூலம், அவர் உங்களை எல்லா சூழ்நிலைகளிலும் கவனித்துக்கொள்வார். * அவர் உங்களைப் பாதுகாப்பார், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். * அவர் உங்களை ஆசீர்வதிப்பார், மற்றவர்களுக்கும் உங்களை ஆசீர்வாதமாயிருக்கச் செய்வார். * நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் வாங்கப்பட்டிருக்கிறீர்கள், ஆகையால், நீங்களோ இந்த உலகமோ உங்களுக்குச் சொந்தமல்ல. * இந்த சத்தியத்தில் தெளிவாக இருங்கள், கடவுளின் திட்டத்தின்படி ஒரு வாழ்க்கையை வாழ உறுதியுடன் இருங்கள்.
Dear child of God, * In this world, you are not alone. God is with you all the time. * Even if your family has forsaken you, or your family, have hated you, and if you feel that others don't want you anymore, don't worry about that. * The Almighty God is reminding you that He has called you by your name and that you belong to Him. * Isn't it amazing that God owns you personally. * What more do we need in this world? * When we respond to Him by offering ourselves completely to Him, He will take care of you in all aspects. * He will protect you and shall provide for your needs. * He will bless you and make you a blessing to others. * You are purchased with the blood of Jesus, but neither you nor this world belongs to you. * Be clear with this truth and be committed to living a life according to God's plan.
சுத்த கிருபையினாலும், இரக்கத்தினாலும் நாம் இரட்சிக்கப்பட்டோம்.. * நாம் பாவிகளாக இருந்தபோதும், நம்முடைய பாவமான வாழ்க்கைக்கான தண்டனையாக இயேசு நமக்காக மரித்தார், பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மைச் நீதிமான்களாகச்செய்தார். * இயேசுவின் இரத்தத்தில் கழுவப்பட்ட அனைவருக்கும் கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் பாக்கியம் கிடைத்தது. * புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு தந்து அவரை அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை தந்தார். அன்பு தேவ பிள்ளையே, * இந்த உலகில் வாழ்க்கை ஏமாற்றமாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம். * இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நீங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கலாம். * ஆனாலும் உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். இயேசுவைப் பின்பற்றுவதற்கான உங்கள் முடிவு, நீண்ட கால நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை நித்தியத்திற்கானவை. * உங்கள் நம்பிக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறிது காலம் தான். * இயேசு நமக்காகத் தயாரித்த வாசஸ்தலங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லப் போகிறார். * பரலோகத்தில் இனி கண்ணீர், நோய், பசி அல்லது தாகம் மற்றும் பொறாமை இல்லை. * சந்தோஷமும், மகிழ்ச்சியும் மட்டுமே அங்கு உண்டு..
We are saved by sheer grace & mercy. * Even when we were sinners, Jesus died for us as a punishment for our sinful life & made us right before God the Father. * All those who had been washed in the blood of Jesus had the privilege of being called the Children of God. * God has given us the spirit of adoption which permits us to call Him our ABBA Father. Dear child of God, * Life in this world could be disappointing & frustrating. * You may be going through a lot of hardships because of your faith in Jesus Christ. * But don't give up. Your decision to follow Jesus has long-term benefits. They are for eternity. * Hold on to your Faith. Just a little more time. * Jesus is going to take us to the mansions that He has prepared for us. * There are no more tears, sickness, hunger or thirst & jealousy in heaven. * There is only Joy & Happiness.
God is perfect. * There is no limit to God.There is nothing that God cannot do. * All things are possible for Him. Realize these facts & always remember them. * Don't boast about your experiences or your current status or strength. * Do not restrict God by seeing Him through your narrow mind. * He is beyond our comprehension. * Just look around & understand the power of God. * When we trust Him, He will do everything for us. * How fortunate we are to be called as the children of this awesome God. * Be happy & cheerful because God takes care of you. * You can do a lot more with the strength of God. * Aim High. Move forward with confidence. You will be more than a conqueror.
தேவன் பரிபூரணர். * அவருக்கு வரம்புகள் இல்லை. அவரால் செய்ய முடியாதது எதுவுமில்லை. * அவருக்கு எல்லாமே சாத்தியமாம். இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டு, அவற்றை எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள். * உங்களது அனுபவங்கள், உங்கள் தற்போதைய நிலை, அல்லது வலிமை பற்றி பெருமை கொள்ள வேண்டாம். * உங்கள் குறுகிய மனதின் மூலம் தேவனைப் பார்ப்பதினிமித்தம் அவரைத் தடைசெய்யாதீர்கள். * அவர் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். * உங்களைச் சுற்றிலும் (சம்பவிப்பவைகளைப்) பார்த்துத் தேவனின் வல்லமையைப் புரிந்து கொள்ளுங்கள். * நாம் அவரை நம்பும்போது, அவர் நமக்காக யாவற்றையும் செய்வார். * நாம், இந்த அற்புதமான தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய சிலாக்கியம். ஆம். * தேவன் உங்களைப் பார்த்துக்கொள்வதால் மகிழ்ச்சியோடும் களிப்போடும் இருங்கள். * அவரது வல்லமையால் நீங்கள் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். * மேன்மையான இலக்கை நியமியுங்கள். திட நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்.
அன்பு தேவ பிள்ளைகளே, * தேவன், உங்களைப் பாவம், மற்றும் சாத்தானின் பிடியிலிருந்து விடுவித்திருக்கிறார். ஆனால் அவருக்காக வாழ்ந்து, அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றியாக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். * நம்முடைய தேவன் பரிசுத்தர், ஆகையால் நாமும் பரிசுத்தராய் இருக்க வேண்டும். * அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார். * இப்போது, அதற்குப் பதிலீடாக, பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நாம் அவரை மகிழ்விக்கவேண்டும். * தேவன் நம் பணத்தையும் செல்வத்தையும் எதிர்பார்க்கவில்லை. * ஆனால், உலகப் பொக்கிஷங்களை விட விலையேறப்பெற்றதொன்றை அவர் எதிர்பார்க்கிறார். அது, அவருக்காக நாம் ஜீவபலியாய் வாழ்வதாகும். * பரிசுத்த வாழ்க்கை வாழ்வதென்பது எளிதானது அல்ல. அதை அடைய, அநேகத் தியாகங்கள் தேவை. * நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள், உங்கள் விடுதலைக்காக அவர் செய்த தியாகத்தை மேன்மையாய்க் கருதுகிறீர்கள் என்றால், உங்கள் பரிசுத்த வாழ்வுக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தியாகம் செய்ய நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள்.
Dear child of God, * God has set you free from the clutches of Sin and Satan but with the obligation to live for Him & to fulfill His plan & purpose. * Our Lord is Holy, and so we must be Holy. * He has sanctified us with His own blood. * Now, It is our turn to make Him happy by living a Holy Life. * God is not expecting our money and riches. * But, He expects something more valuable than worldly treasures. That is our life as a living sacrifice to Him. * Living a Holy life is not easy. It takes a lot of sacrifices to achieve. * If you love God and value His sacrifice for your freedom, then you will surely be more than willing to sacrifice everything that hinders your Holy life.
* இஸ்ரேலை(அவருடைய பிள்ளைகளை) ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம் என்று உங்களுக்குத் தெரியுமா? * உங்களைப் படைத்த ஆண்டவரை நீங்கள் நம்பினால், அவர் உங்கள் பலவீனத்தின் மூலம் தமது வல்லமையை வெளிப்படுத்துவார். * நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் உங்களை ஒரு சாதனையாளராக்க, இறைவனின் வல்லமை உங்கள் மீது வரும். * எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் பயத்தால் மூழ்கடிக்க முடியாத ஒரு வலுவான நகரமாக அவர் உங்களை உருவாக்குவார். * நீங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சமாக இருக்கலாம். * உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதம் மற்றும் உந்துதலின் சிறந்த ஆதாரமாக மாறும். * தைரியமாகவும் திடமனதோடும் இருங்கள். உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதை நீங்கள் சாதிப்பீர்கள்.
* Do you know, it is God's desire to bless His children (Israel) * If you believe in your creator, He will manifest His power through your weakness. * You may be physically & mentally weak. Yet the Lord's power will come upon you to make you an achiever. * He will make you a fortified city that cannot be overwhelmed by negative thoughts & fear. * You could be a ray of hope to others & you will become a great source of blessing & motivation. * Be bold & strong. You will accomplish much beyond your own expectations & much to the surprise of others.
கடவுளின் அன்பு மிகவும் ஆழமானது, மிகவும் வலிமையானது மற்றும் அளவிட முடியாதது. அவரது அன்பு உறுதியானது, ஒருபோதும் கைவிடாது. அன்பு தேவ பிள்ளையே, * இவ்வளவு பெரிய அன்பினால், அவர் உங்களை அவரிடம் ஈர்த்திருக்கிறார். * உங்கள் சொந்த தகுதி மற்றும் பலங்களால் நீங்கள் காப்பாற்றப்படவில்லை. ஆனால், அவருடைய கிருபையினாலும் அன்பினாலும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். * இது அவர் உங்களுக்கு அளித்த ஒரு அனுகூலமான உதவி. * இந்த பூமியின் அஸ்திவாரத்திற்கு முன்பே கடவுளால் அவருடைய குழந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் நீங்கள் ஒருவராக இருக்கிறீர்கள். * உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் உருவாவதற்கு முன்பே, அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். * நீங்கள் அவருக்கு மிகவும் விசேஷமானவர்கள். * உலகம் உங்களை கைவிடக்கூடும். ஆனால் கடவுள் உங்களை கைவிட மாட்டார். * கடவுள் உங்களை அவருடைய அன்பிற்கு தகுதியானவர் என்று கருதினார் என்பதை நினைவில் வையுங்கள். * அவருடைய அன்பு நித்தியத்திற்கானது. * இன்று உற்சாகமாக இருங்கள். * நீங்கள் இயேசுவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிந்து உற்சாகம் கொள்ளுங்கள். வார்த்தைகளால் விவரிக்கமுடியத அளவு அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.
God's love is so deep, so strong and is beyond measure. His love is steadfast and never fails. Dear child of God, * With such a great love, He has drawn you to Him. * You are not saved by your own merits & strengths. But, purely by His grace and love. * It's an unmerited favor He has given you. * You are one in a few chosen by God to be His child even before the foundation of this earth. * Even before you were formed in the womb of your mother, He chose you. * You are special and valuable to Him. * The world may forsake you. But God won't forsake you. * Remember how God considered you worthy of His love. * His love is for eternity. * Be encouraged today. * Be motivated to know that you are very very special to Jesus, and He loves you so much more than words can say.
Encouragement is a powerful medicine. * Use it as often as possible to create a positive vibe in your ambience. * Encouragement will destroy discouragement & negative thinking. * Stop finding fault with others. * Instead, start looking for the good qualities in them. Admire them & appreciate them. * It will help them move forward with confidence.
ஊக்கம் ஒரு சக்திவாய்ந்த மருந்து. * உங்கள் சூழலில் ஒரு ஆக்கப்பூர்வமான அதிர்வை உருவாக்க, முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்தவும். * ஊக்கம் மனதளர்வையும் எதிர்மறை சிந்தனையையும் அழிக்கும். * மற்றவர்களிடம் தவறு கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். * அதற்கு பதிலாக, அவர்களில் உள்ள நல்ல குணங்களைத் தேடத் தொடங்குங்கள். அவர்களைப் போற்றுங்கள், பாராட்டுங்கள். * இது அவர்களுக்கு நம்பிக்கையுடன் முன்னேற உதவும்.
நம்மை மீட்கும்பொருளாக இயேசு தம்முடைய இரத்தத்தைக் கொடுத்து, நம்முடைய பாவங்களுக்கான விலையைச் செலுத்தினார். * எந்தச் செல்வமும், பணமும், சக்தியும் இந்த மீட்பை வாங்க முடியாது. * இந்த இரட்சிப்பை அனுபவிப்பதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம், ஆண்டவரையும், அவரது உயர்ந்த தியாகத்தையும் சிறு பிள்ளையைப் போன்று நம்புவதேயாகும். * நீங்கள் இயேசுவின் இரத்தத்தில் கழுவப்பட்டால், உங்கள் கடந்தகாலப் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுவிட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். * கிறிஸ்துவில், நீங்கள் ஒரு புதிய படைப்பு. * உங்களுக்குள் ஆவியால் வாழும் இயேசுவின் மூலம் உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை (மீண்டும் பிறந்தது). * நீங்கள் ஒரு புதிய பயணத்தில் இருக்கிறீர்கள். அது, பரலோகத்தில் இயேசுவோடு நித்திய ஜீவனைப் பெறுவதற்கான விசுவாசப் பயணம். * பரிசுத்தமும், நீதியுள்ள வாழ்க்கையும், இந்த நித்திய பரிசைப் பெறுவதற்கான முக்கிய தகுதிகளாகும். * நாம் பரிசுத்தமாய் வாழும்படி நமக்கு உதவ கடவுள் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார். * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் தொலைந்து போக மாட்டீர்கள்.
Jesus paid the price for our sins by giving His blood as a ransom and redeeming us. * No wealth, no money nor power can buy this redemption. * God expects our childlike Faith in Him & in this supreme sacrifice made for us to enjoy this salvation. * If you are washed in the blood of Jesus, note that all your past sins have been washed away. * In Christ, you are a new creation. * You have a new life (born again) through Jesus, who lives in spirit within you. * You are on a new journey. A journey of faith to inherit eternal life with Jesus in Heaven. * Holiness and Righteous Living are the key ingredients for receiving this eternal gift. * God has given the Holy Spirit to help us to live a Holy life. * Obey the Holy Spirit at every step of your Life. You will not get lost.
* தேவசித்தம் தங்கள் திருமணத்தில் நிறைவேறட்டும் என்று ஜனங்கள் ஜெபிப்பதை நான் பார்த்திருக்கிறேன். * ஆனால், தீர்மானம் எடுக்க வேண்டிய நேரத்தில், அவர்கள் தங்கள் சித்தம் மற்றும் விருப்பத்திற்கேற்ப, பல்வேறு புதிய கட்டுபாடுகளை சொல்லிக்கொண்டிருப்பர். உங்கள் காரியம் என்ன? நாம் தேவனுடைய சித்தத்தின்படி எதையாகிலும் கேட்டால் அதைப் பெற்றுக்கொள்வோம் என்று வேதம் சொல்லுகிறது. அவருடைய சித்தத்தை அறிவது எப்படி? * தேவ சித்தத்தை அறிந்துகொள்வதற்கான அறிவைக் குறித்து வேதம் சொல்லுகிறது. இந்த அறிவிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள். * எந்தவொரு நிபந்தனையுமின்றி தேவ சித்தத்தைச் செய்வதற்கு அர்ப்பணிப்புள்ளவராயிருங்கள். * தேவ சித்தத்தின் மையத்தில் இருக்கும்வரைக்கும், நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம். * உங்கள் வாழ்வைத் தேவனுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுக்க ஆயத்தமா? அப்படிச் செய்யும்போது, நீங்கள் சர்வ வல்லவரின் சிறகுகளின் கீழ் பாதுகாப்பும் பத்திரமுமாய் இருப்பீர்கள்.
I have seen people praying that God's will be done in their marriage. * But when the time comes for decisions to be taken, they will insert multiple criteria according to their own will and desire. How about you? The Bible states that if we ask anything according to the will of God, we will receive it. How to know the will of God? * The Bible speaks of knowledge to understand God's will. Ask God for this knowledge. * Be committed to doing the will of God without any condition. * As long as we remain at the center of the will of God, we are safe. * Are you ready to yield your life totally to God. Then you will have safety and security under the wings of the Almighty.
நீதியுள்ளவராய் இருப்பது, நம் வாழ்க்கை முறையாக மாற வேண்டும். * தேவன் நீதிமானைச் சிநேகிக்கிறார். * நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும் என்று வேதம் கூறுகிறது. * தேவன் நீதிமான்களின் ஜெபங்களுக்குப் பதில் தர ஆவலாயிருக்கிறார். * அப்படிப்பட்ட ஜெபங்கள் அவருக்குத் தூபம்வர்க்கம்போல் இருக்கின்றன. நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதே நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதற்கான முக்கியமான திறவுகோலாகும். * உங்கள் எண்ணங்கள், நீங்கள் சொல்லும் வார்த்தை, மற்றும் கிரியைகளைக்குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். * அவ்வப்போது உங்களைச் சீர்படுத்திக்கொள்ளுங்கள். * உங்கள் வாழ்க்கை இனி ஒருபோதும் முன்போல இருப்பதில்லை.ac
Being righteous is meant to become a lifestyle. * God loves a righteous person. * He who is righteous shall be made more righteous, says the Bible. * God loves to answer the prayers of righteous people. * Such prayers are like incense to Him. The key to our prayers being answered is a life of righteousness. * Be mindful of your thoughts, the words you say, and the work you do. * Take corrective steps now & then. * Your life will never be the same again.
நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? * வெற்றி என்பது எளிதல்ல. * எல்லா வெற்றிக்கும் பின்பாக, தியாகம், வியர்வை கண்ணீர் என்பவையெல்லாம் அடங்கி இருக்கின்றன. ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையைக் குறித்துக் கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்களா? * கனவு காண்பது நல்லது. * ஆனால், கடின உழைப்பும் முறையான திட்டமும் இல்லையென்றால், அது பகற்கனவைப்போல் பறந்துபோகும். செய்யவேண்டியன: * உங்கள் கனவுகளையும் தரிசனங்களையும் எழுதி வையுங்கள். * ஒவ்வொரு நாளும் அதை முழுவதும் வாசித்து அதற்காக ஜெபம் பண்ணுங்கள். * எளிமையானதும், சீக்கிரத்தில் அடையக்கூடியதுமான செயல்படிகளை உருவாக்குங்கள். * செயல்படத் துவங்குங்கள். * கனவுகளோடுகூட, அர்ப்பணிக்கப்பட்டதும், நிலையானதுமான பணியே உங்களை வெற்றியாளராய் மாற்றும். * தேவன் கிருபையைத் தந்து உங்கள் பிரயாசங்களை ஆசிர்வதிப்பார். * நீங்கள் வெற்றிசிறந்து சந்தோஷம் கொள்வீர்கள்
Would you like to be successful? * Success isn't easy. * There will be sacrifice, sweat & tears behind every success. Are you dreaming of a successful life? * It's okay to dream. * But if you don't have a smart plan & hard work, it will just evaporate like a daydream. Action: * Write down your dreams & visions. * Read through it every day & Pray for it. * Create simple, achievable steps. * START DOING. * Dreams + dedicated, consistent work will make you successful. * GOD will give you the grace & shall bless your efforts. * You will become successful & will have Joy.
தேவன் உங்களை விசாரிக்கிறவர். * நீங்கள் விசுவாசத்தில் எடுத்து வைக்கும் அடிகளில் அவர் பிரியமாயிருக்கிறார். * எதிர்ப்புகள் மற்றும் பாதகமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவரைப் பின்பற்ற நீங்கள் எடுத்த தீர்மானம், அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றது. * கர்த்தருக்காய் நீங்கள் பாராட்டும் வைராக்கியமும் அவர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும் அவருக்குச் சுகந்த வாசனையாய் இருக்கிறது. அன்பு தேவனுடைய பிள்ளையே, * முன்னேறிச் சென்றுகொண்டே இருங்கள். * சத்துருவைக் குறித்தும் அவனது பொல்லாத திட்டங்களைக் குறித்தும் கவலைப்படாதிருங்கள். * எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றும், உங்களைச் சேதப்படுத்த மாட்டாது. * உங்களைச் சுற்றிலும் இருக்கும்படிக்குத் தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். * நீங்கள் அவருடைய பாதுகாக்கும் கரத்திற்குள் இருக்கிறீர்கள். * தேவன் மற்றவர்களுடைய கண்களுக்கு முன்பாக உங்களுக்காக அதிசயங்களைச் செய்து உங்களை மேன்மைப்படுத்துவார். * அவர் எண்ணற்ற அற்புதங்களைச் செய்து, தம்முடைய ஆசிர்வாதங்களை உங்களுக்கு வழங்கி, உங்களை இன்னும் கனம் பொருந்தியவராய் மாற்றுவார். * உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள், உங்களது வாழ்வில் காணும் இயேசுவினிமித்தம் உங்களுக்குப் பயப்படுவர். * சந்தோஷமாயிருங்கள். * உங்கள் விசுவாசப் பயணத்தைத் தொடருங்கள். * இடையில் நிறுத்தாதிருங்கள். * நின்று விடாதிருங்கள். * பின் திரும்பாதிருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாயிருப்பீர்கள்.
God cares for you. * He is pleased with your step of faith. * Your decision to follow Him, in spite of all oppositions & unfavorable situations is remarkably valuable to His eyes. * Your zeal for the Lord and the Faith you have on Him is a pleasing aroma to Him. Dear child of God, * Keep going forward. * Don't be bothered about the enemy and his wicked plans. * Nothing shall hurt you by any means. * God has charged His angels around you. * You are in safe hands. * God will perform wonders for you before the eyes of others and honor you. * He will make you more respectable by endless miracles and the bestowing of His blessings on you. * People around you will revere you for the sake of Jesus, who will be seen in your life. Be Joyful. Continue your journey of Faith. Don't pause. Don't stop. Don't turn back. You shall be a blessing to others.
தேவன் உங்களைக்கொண்டு செய்யும்படியாக ஒரு மாபெரும் அறுவடையை நியமித்திருக்கிறார். * அவர் உங்களை வல்லமையாய்ப் பயன்படுத்தப்போகிறார். நீங்கள் உங்களது வாழ்வில், உங்கள் ஊழியத்தின் மூலம் தேவனுடைய அதிசயங்கள் நடைபெறக் காண்பீர்கள். * தேவன் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளித்து அற்புதங்கள் செய்வதைக் காண்பீர்கள். *அநேக ஜனங்கள் இயேசுவைச் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளத் தங்களது வாழ்வை ஒப்புக்கொடுப்பதையும், அவர்கள் வாழ்க்கை மறுரூபமாவதையும் காண்பீர்கள். ஆகையால் சோர்ந்துபோகாதிருங்கள். மனம் தளராமலும் பயப்படாமலும் இருங்கள்.
God has already planned a great harvest through you. God is going to use you mightily. You will see wonders of God happening in your life & through your ministry. You will see God answering your prayers & doing miracles. You will see many people committing their life to accept Jesus Christ as their personal savior & their lives getting transformed. So do not lose heart. Don't give up & don't be afraid
நீதிமான் பனையைப்போல் செழிப்பான் என்று வேதம் சொல்லுகிறது. * பாவிகளாய்ப் பிறந்த நாம் அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். * தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாச் சூழ்நிலைகளின் மத்தியிலும் எதிர்ப்புகளின் மத்தியிலும் செழித்து வளர முடியும். நீதிமான்களாகிய நாம், * (அவரால்) நிலைநிறுத்தப்பட்டு,எப்பக்கமும் பலங்கொண்டு பெருகுவோம். நிறங்களையும், இனங்களையும், மொழிகளையும் கடந்து, நாம் அநேகருக்கு அடைக்கலம் கொடுத்து, உதவிக்கரமும் நீட்டுவோம். * கேதுருமரத்தைப்போல, இந்த உலகத்தில் சுயநலமற்றதோர் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து நாம் கிறிஸ்துவைப் பிரதிபலிப்போம். * எல்லா காலத்திலும், கனிகொடுத்து, நம்முடைய வாழ்வில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
Bible says the righteous will flourish like the palm tree. * We are born sinners but made righteous by the blood of Jesus. * We are the children of God and shall thrive in all situations even amid adversities. As a righteous person, * We will also be established firm and grow tall and wide, giving shelter and support to many people around cutting across the boundaries of color, culture, and languages. * We represent Christ for selfless living in this world like the cedar tree. * We should be fruitful in season and out of season glorifying God in our life. Dear Child of God, You are unique. You are a blessing to this world.
இந்த உலகத்தில் கிடைப்பதற்கு அரிதானது சமாதானம். அது தேவனுடைய ஆசீர்வாதம். தன்னுடைய பிள்ளைகளுக்கு இயேசு வாக்கு பண்ணுகிறார்.
Today, even those who are considered to be successful, wealthy & highly educated are longing to have inner peace. * We can buy the material things of this world using our influence and wealth. * But peace cannot be purchased by anyone nor can be produced in this world. Real peace comes from God. He gives peace only to those who are washed by the blood of Jesus. * Are you disturbed in your mind and spirit? * Are you struggling to maintain peace with your family members and others? * Check your life, whether everything is right with God. * When we error before God, the first casualty is our inner peace. It is an indication of our spiritual condition. * Set right of all wrongdoings, come back to Jesus seeking His forgiveness. * He will forgive your iniquities, cleanse you by His blood, and shall fill you with His peace. God's peace within us will give the required confidence to face the world.
We have a good God. * He is our Lord Almighty. * He is all-powerful and present everywhere. * There is nothing impossible for Him. * This world is wicked and troublesome. * We all have to pass through this, and there is no escape. * But, the good news is, Our God is with us all the time, and He will protect us from all our disasters. * Yes! He will protect His children in times of trouble. * He will make His Angels charge over us who are on duty 24 × 7 • Are you scared about your current situation and people around? • Are you traveling alone as a stranger in a new location? • Call unto Him. Jesus is your only reliable protection. • Don't put your trust in men. • Put your trust in Jesus. • Just follow His instructions. You will never be harmed or destroyed.
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை
* Are you afraid of your future? * Are you worried about the next phase of your life like × Marriage × New College/School/City/Course × New Job / Project × New business * Are you entangled in a legal mess in your marriage or property dispute and trying for a compromise, but afraid of how the coming days will be? * Are you distressed about the world scenario due to COVID19 and the uncertainties looming around our future? × Yes! Your fear and anxieties are justified. × But, then you don't have any control over them. × Your worries and fear alone won't change the scenarios. × Rather, look at Jesus, who is promising to be with you irrespective of the situation you will have to pass through. × There is nothing to be scared when Jesus is with you. × He will take care of you and your future. You are in safe hands. Relax